குட் நியூஸ்.!! ரூ.1,800 சரிவு.! தடாலடியாக சரிந்த தங்கம் விலை.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold rate
Updated on

தங்கத்தின் விலை நேற்று காலையில் சிறிதளவு உயர்ந்த நிலையில், மாலையில் ஒரே அடியாக சரிந்தது. காலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 வரை உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.1,680 குறைந்தது. அதோபோல் வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்த நிலையில், மாலையில் மேலும் 5 ரூபாய் குறைந்தது. இந்த விலை வீழ்ச்சி இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

நேற்று அமெரிக்கா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியன் விளைவாகத் தான் தங்கம் விலை குறைந்தது எனக் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் அதிகரிக்கும் பட்சத்தில், அது தங்கத்தின் விலையின் மீது மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (செப்டம்பர் 1) தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ஒரு கிராம் ரூ.195 குறைந்து 14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,560 குறைந்து ரூ.1,13,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.10 குறைந்து ரூ.250-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 2) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.225 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை சரிந்துள்ளது. இந்த விலை சரிவு மேலும் தொடருமா அல்லது மீண்டும் விலை உயருமா என்பதே பலரின் கேள்வியாக இருக்திறது. இருப்பினும் விலை சரிந்தால் ரூ.1 லட்சத்துக்கு கீழே வந்தால், நன்றாக இருக்கும் என இல்லத்தரசிகள் விரும்புகின்றனர்.

ஆனால் செப்டம்பர் மாத இறுதியில் விலை நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பது புரியாத புதிர் தான். தற்போது முகூர்த் நாட்கள் அதிகம் வருவதால், விலை உயர்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

இதையும் படியுங்கள்:
ரெக்கரிங் டெபாசிட் vs பிக்சட் டெபாசிட்: எதில் முதலீடு செய்தால் அதிக இலாபம்?
தங்கம் விலை
Gold and Silver Rates
Gold and Silver

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

செப்டம்பர் 1: 1 கிராம் - ரூ.14,175 1 சவரன் ரூ.1,13,400

ஆகஸ்ட் 31: 1 கிராம் - ரூ.14,370 1 சவரன் ரூ.1,14,960

ஆகஸ்ட் 30: 1 கிராம் - ரூ.14,505 1 சவரன் ரூ.1,16,040

ஆகஸ்ட் 29: 1 கிராம் - ரூ.14,505 1 சவரன் ரூ.1,16,040

ஆகஸ்ட் 28: 1 கிராம் - ரூ.14,800 1 சவரன் ரூ.1,18,400

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

செப்டம்பர் 1: 1 கிராம் - ரூ.250

ஆகஸ்ட் 31: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 30: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 29: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 28: 1 கிராம் - ரூ.265

ஒரு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 2-ல் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையானது.

ஒரு வருடத்திற்கு முன்பு 2025 செப்டம்பர் 2-ல் ஒரு சவரன் ரூ.77,800-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.137-க்கு விற்பனையானது.

கடந்த கால விலை நிலவரங்களை இன்றைய விலையோடு ஒப்பிட்டால், தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டின் பலன்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
“விஜய் சாருடன் இனி நடிக்கவே முடியாது!” - மேடையில் கலங்கிய கேரளத்து நடிகர்.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com