ஷாக்.!! மீண்டும் எகிறியது தங்கம் விலை.! 2 நாட்களில் ரூ.3,280 உயர்வு.!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
தங்கம் விலை
Gold Price
Updated on

செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.3,360 வரை குறைந்தது. ஆனால் நேற்று (செப்டம்பர் 3) ஒரு சவரன் தங்கம் ரூ.2,320 வரை உயர்ந்தது. மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட விலை சரிவை நினைத்து நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், அடுத்த நாளே விலை உயர்ந்தது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே போர்த் தாக்குதல்கள் தீவிரமடையும் சூழலில், அது தங்கத்தின் விலையின் மீது மிகப்பெரும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (செப்டம்பர் 3) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், ஒரு சவரன் ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 4) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.960 உயர்ந்து, ரூ.1,14,880-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை ரூ.10,000 வரை உயர்ந்த நிலையில், செப்டம்பர் மாதத்தின் முதல் 2 நாட்களில் தங்கம் விலை சரிந்தது. இந்த விலை சரிவு மேலும் தொடருமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தடாலடியாக விலை உயர்ந்தது.

செப்டம்பர் மாதத்தின் 3வது வாரத்தில் அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றம் அடையவில்லை எனில் தங்கத்தின் விலை லேசாக குறையும். ஒருவேளை வட்டி விகிதம் குறைந்தால், தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
முதிர்வடையும் முதலீட்டை மறு முதலீடு செய்வது சரியான தீர்வா?
தங்கம் விலை
Gold price
Gold priceAI Image

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

செப்டம்பர் 3: 1 கிராம் - ரூ.14,240 1 சவரன் ரூ.1,13,920

செப்டம்பர் 2: 1 கிராம் - ரூ.13,950 1 சவரன் ரூ.1,11,600

செப்டம்பர் 1: 1 கிராம் - ரூ.14,175 1 சவரன் ரூ.1,13,400

ஆகஸ்ட் 31: 1 கிராம் - ரூ.14,370 1 சவரன் ரூ.1,14,960

ஆகஸ்ட் 30: 1 கிராம் - ரூ.14,505 1 சவரன் ரூ.1,16,040

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

செப்டம்பர் 3: 1 கிராம் - ரூ.255

செப்டம்பர் 2: 1 கிராம் - ரூ.250

செப்டம்பர் 1: 1 கிராம் - ரூ.250

ஆகஸ்ட் 31: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 30: 1 கிராம் - ரூ.260

ஒரு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 4-ல் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையானது. ஒரு வருடத்திற்கு முன்பு 2025 செப்டம்பர் 4-ல் ஒரு சவரன் ரூ.78,360-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.137-க்கு விற்பனையானது.

கடந்த கால விலை நிலவரங்களை இன்றைய விலையோடு ஒப்பிட்டால், தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டின் அரிய பலன்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
ஒரு நல்ல முதலீடு என்றால் என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com