இளைஞர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி! - விக்ரம்-1 ராக்கெட் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

விக்ரம்-1 ராக்கெட்
விக்ரம்-1 ராக்கெட்Source:www.bizzbuzz.news
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்(Skyroot Aerospace) என்ற தனியார் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 (Vikram-1) ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வின் மூலம், இந்தியாவின் விண்வெளித் துறையில் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளதுடன், இந்திய தனியார் நிறுவனங்கள் உலகளாவிய ஏவுதல்கள் சந்தையில் அடி எடுத்து வைக்கின்றன.

இதுவரை தனியார் மூலம் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகள் சோதனை அடிப்படையிலேயே சிறிது தொலைவு வரை செலுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் முதல் முறையாக விக்ரம் 1 ராக்கெட் புவியின் தாழ்வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டு, விண்வெளி ஆய்வுக் கலன்களை நிலை நிறுத்த உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு 'ஆகமன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஹைதராபாதை தலைமையிடமாக கொண்ட 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் விக்ரம்-எஸ் என்ற ராக்கெட்டை 2022-ல் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி நம் நாட்டின் முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை ஏற்கனவே இந்த நிறுவனம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தும் திறன் கொண்ட விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.

இந்த ராக்கெட் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் கொண்டது. முழுவதுமாக இலகுரக கார்பனால் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று திட எரிபொருள் நிலைகள் மற்றும் ஒரு திரவ சுற்றுப்பாதை சரிசெய்தல்(liquid kick stage) தொகுதியால் இயங்குகிறது. அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் பயணத்தில் 450 கிலோமீட்டர் உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த இலக்கை நிர்ணயத்துள்ளனர்.

இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு புவியின் தாழ்வட்டப் பாதையை(Low Earth Orbit) அடைய சுமார் 15.46 நிமிடங்கள் ஆகும். விக்ரம்1 மூலம் கிரஹா ஸ்பேஸ் (Grahaa Space,), காஸ்மோ சர்வ் (Cosmoserve), Dcubed மற்றும் ஸ்கைரூட் போன்ற நிறுவனங்களின் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்தின் 'காஸ்மிக் ப்ளூம்' (Cosmic Bloom) போன்ற மைக்ரோ சாதனங்களும் இந்த ராக்கெட் மூலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளன.

காலை 11:30 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. 12.05 மணிக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டு சரியாக 12.05 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம் 1.

விக்ரம்-1 ராக்கெட்
விக்ரம்-1 ராக்கெட்source:Ddnews

ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இன்று விண்ணில் ஏவப்பட்ட விக்ரம் 1 ராக்கெட்டுக்கு ஏற்கனவே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,

"இந்தியாவின் விண்வெளி பயணத்துக்கு ஒரு வரலாற்று எல்லை. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம் 1, இன்று காலை 11:30 மணிக்கு ஸ்கைரூட் ஏரோஸ்பேசிலிருந்து ஏவப்படுகிறது. இந்த நான்கு நிலைகள் கொண்ட ராக்கெட் விரைவான சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றின் மூலம் நம் இளைஞர்களின் திறமை, உறுதிப்பாடு, தொழில்முனை மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் புதுமை மற்றும் நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகளுக்கான பாதையை நம் விண்வெளித் துறை அளிப்பதையும் காட்டுகிறது.

விக்ரம் 1 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதலுக்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள். விக்ரம் 1 அதன் உயரத்தை அடைந்து, வரலாற்றை உருவாக்கி, ஆராய்ச்சியாளர் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கட்டும். இந்த வரலாற்று முன்னெடுப்புக்கு அனைத்து இந்தியர்களும், குறிப்பாக இளம் நண்பர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
திமிருக்கான பரிசு தான் இந்த தோல்வி..விஜய் வெற்றி மற்றும் திமுக தோல்வி குறித்து போஸ் வெங்கட் பேட்டி.!
விக்ரம்-1 ராக்கெட்
இதையும் படியுங்கள்:
ஹோட்டல் சீக்ரெட் அவுட்! இனி செலவு பண்ணாதீங்க, வீட்லயே கோவை காளான் மசாலா!
விக்ரம்-1 ராக்கெட்
logo
Kalki Online
kalkionline.com