இந்திய விமானியின் வீரத்தை ராகுல் காந்தி பாராட்டாதது ஏன்? பாஜக கடும் தாக்கு!

இந்திய விமானியின் வீரத்தை ராகுல் காந்தி பாராட்டாதது ஏன்? பாஜக கடும் தாக்கு!
sambith bathra
Smith Rahul INC
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

ஃப்ளை துபாய் விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரையும் பலி கொள்ளும் திட்டத்துடன் செயல்பட்ட, இணை விமானியை தடுத்து அவரிடம் கத்திக் குத்து வாங்கி, அனைவரின் உயிரையும் காப்பாறறியவர் விமானி ஸ்மித் மச்சார். அவரது இந்த வீர தீர செயலை பாராட்டி உலகம் முழுக்க உள்ள தலைவர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். மிக முக்கியமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி , இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு , அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் அவரை பாராட்டி உள்ளனர்.

இந்த விஷயத்தில் பாஜக , ராகுல் காந்தி குறிவைத்து கடுமையாக தாக்கியுள்ளது. உலகமே பாராட்டக்கூடிய ஒரு இந்திய விமானியின் தைரியத்தை பற்றி, ராகுல் காந்தி ஏன் பேசவில்லை? அவர் எதற்காக மௌனம் காக்கிறார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. பொதுவாக ராகுலின் மௌனத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் இந்தியர்களை பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கவில்லை என்று பாஜக காட்டமாக விமர்சித்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி , "பல மணி நேரம் கத்தி குத்து வாங்கி, பல பயணிகளின் உயிரை காப்பதற்காக போராடிய கேப்டன் ஸ்மித் மச்சார், அவரது தைரியத்திற்காகவும் வீரத்திற்காகவும் சர்வதேச அளவில் பாராட்டினை பெற்று வருகிறார். ஒரு இந்தியர் உலக அளவில் தனது வீர செயலுக்காக பாராட்டு பெறும் பொழுது , ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் மௌனத்தை கடைபிடிக்கிறது.

தன்னை தேசபக்தன் என்று கூறிக் கொள்ளும் ராகுல் , ஒரு ஒரு இந்தியரின் தைரியத்தையும் வீரத்தையும் பாராட்டாமல் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும்? " என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு ஊடாக சந்திப்பில் பேசிய , பாஜகவின் மற்றொரு செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா , "ஸ்மித்தின் துணிச்சலான செயலை ஒவ்வொரு இந்தியரும் பாராட்டிக் கொண்டுள்ளனர். அவர் விரைவாக குணமடையவும் இந்தியர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு வருகின்றனர். அவரது வீரத்தை பாராட்டியும் அவரது செயலுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்றனர். ஆனால், ராகுல் மௌனமாக இருக்கிறார், அதற்கு சொந்த காரணங்கள் ஏதேனும் இருக்கலாம்.

Pradeep bandari
Pradeep bandari BJP

ராகுலின் ஒவ்வொரு செயலுக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அதைகுறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.. ராகுல் எங்கே இருக்கிறார்? அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டாரா? என்று தெரியவில்லை, அவர் இன்று மாலைக்குள் ட்விட் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராகுலை கடுமையாக தாக்கி பேசிய பத்ரா , "ஆர்எஸ்எஸ் அமைப்புகளால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக ராகுல் தெரிவித்திருந்தார். ராகுலுக்கு இந்தியாவைப் பற்றி தவறாக பேசுவது தான் இயல்பு, இந்தியர்களை புகழ்ந்து அவருக்கு பழக்கம் இல்லை. அவர் இந்தியாவின் ராணுவத்தையும் வீரர்களையும் தொடர்ந்து அவமதித்து வருகிறார். அவர்களின் சாதனைகளுக்கு ஆதாரம் கேட்கிறார். ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குனரை பொய்யர் என்று கூட விமர்சித்து இருந்தார். அதனால், நாம் அவரிடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம்" என்று சாடி இருந்தார்.

ராகுல் காந்தி எதற்காக ஸ்மித் மச்சாரை பாராட்டவில்லை? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ஏராளமான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; நரிகள்..!
sambith bathra
logo
Kalki Online
kalkionline.com