போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பவர் ஜான் பிரிட்டோ. போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி ஜான் பிரிட்டோ என்பவருடன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத் தொடர்புபடுத்தி திமுக தகவல் ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவை எதிர்த்து, இவ்வழக்கைத் தாக்கல் செய்தார் ஆதவ் அர்ஜூன்.
திமுகவின் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் மு.க.ஸ்டாலினும், இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டார். திமுக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவு முற்றிலும் பொய்யானது மற்றும் உள்நோக்கம் கொண்டது. ஆகையால் ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு வழங்குவதோடு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதியன்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, விசாரணை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வருகின்ற செப்டம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21-ம் தேதிக்குப் பிறகே இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்.
இன்று மாலை திமுகவின் முப்பெரும் விழா நடைபெற இருந்தது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த முப்பெரும் விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸஅதோடு முப்பெரும் விழா நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, ஆ.ராசா மற்றும் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து வழக்கில் திமுகவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் காலை முதலே திமுகவிற்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது.
இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், இன்று நடந்தவை அனைத்தும் திமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.