மனைவியின் நகைகளுக்கு கணவர்,மாமியார் உரிமை கொண்டாட முடியுமா..? சட்டம் சொல்வது என்ன..?

Stridhan law India
Stridhan law IndiaAI Image
Updated on

இந்தியாவில் வரதட்சணை சட்டப்படி குற்றம் என்றாலும், தமிழக பாரம்பரியப்படி திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு தாய் வீட்டில் இருந்து சீதனமாக நகை மற்றும் பணம் கொடுப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியத் திருமணங்கள் அவற்றின் பிரம்மாண்டம், சடங்குகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய மரபுகளுக்காகப் பெயர் பெற்றவை. மேலும் இந்தக் கொண்டாட்டங்களின் மையத்தில் தங்கம் முக்கிய இடத்தை வகிக்கிறது. மணப்பெண் கழுத்தணிகள் முதல் பரம்பரை வளையல்கள் வரை, தங்க நகைகள் ஏறக்குறைய ஒவ்வொரு இந்தியத் திருமண விழாவிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன.

மாறிவரும் ஃபேஷன் போக்குகள் மற்றும் நவீன வாழ்க்கை முறைகள் இருந்தபோதிலும், இந்தியத் திருமணங்களில் தங்கம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. நவீன திருமணங்கள் எளிமையாகி வரும் வேளையில், மணப்பெண்களுக்கான தங்க நகைகள் பாரம்பரியம் மற்றும் குடும்ப கௌரவத்தின் சின்னமாகத் திகழ்கின்றன.

இந்து பாரம்பரியத்தில், தங்கம் செழிப்பின் சின்னமாக விளங்குகிறது மற்றும் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. ஒரு மணமகள் தங்க நகைகளை அணிந்து தனது புதிய வீட்டிற்குள் நுழையும்போது, ​​அவள் ஆசீர்வாதங்களையும், செல்வச் செழிப்பையும், நிதி நிலைத்தன்மையையும் கொண்டு வருகிறாள் என்று குடும்பத்தினர் நம்புகிறார்கள்.

அடையாளப்பூர்வமாக மட்டுமல்லாமல், தங்கம் மணமகளுக்கு நிதிப் பாதுகாப்பாகவும் விளங்குகிறது. வரலாற்று ரீதியாக, அவசர காலங்களில் பெண்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட செல்வத்தின் வடிவமாக தங்கம் வழங்கப்பட்டது. பாரம்பரியம், உணர்வுப்பூர்வமான மதிப்பு மற்றும் நீண்ட கால முதலீட்டு சாத்தியம் ஆகியவற்றின் இந்தக் கலவையானது, தங்கத்தை இந்தியத் திருமணச் சடங்குகளின் ஒரு இன்றியமையாத அங்கமாக ஆக்குகிறது.

பெற்றோர் வீட்டில் சீதனமாக வழங்கப்படும் பொருட்கள் அந்தப் பெண்ணுக்கு சொந்தமானதா? அல்லது அவருடைய கணவரின் குடும்பத்தினருக்கும் சொந்தமானதா? என்பதைத் தான் இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு செயலும் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களால் முறையாக நிர்வகிக்கப்படுகின்றன. அப்படித்தான் பெண்கள் கொண்டுவரும் சீதனம் யாருக்கு சொந்தம் என்பதற்கு இந்தியாவில் சட்டம் இருக்கிறது.

ஒரு பெண் திருமணத்தின் போது தனது பெற்றோர் வீட்டில் இருந்து கொண்டு வரும் நகை அல்லது பிற சொத்துக்கள் அனைத்தும் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். இதற்கு முன்னர் நடந்த குடும்ப தகராறு வழக்குகளில் பலமுறை உச்சநீதிமன்றம் இதே தீர்ப்பை தான் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டுக்குச் செல்லும்போது, பெற்றோர் வீட்டில் இருந்து பணம், தங்க ஆபரணங்கள், வெள்ளி பாத்திரங்கள், ரொக்கப்பணம், வங்கிகளில் பிக்சட் டெபாசிட், நிலம், வீடு மற்றும் இதர பொருள்கள் அதாவது, வீட்டு உபயோகப் பொருட்கள் என அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சீதனம் என்ற பெயரில் கொடுப்பது வழக்கம். சில வீடுகளில், பெண்கள் திருமணமாகி வந்தவுடன், கணவர் வீட்டில் அந்த பெண்ணிற்கு அவர் பெற்றோர் வீட்டில் வழங்கப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுண்டு.

இதையும் படியுங்கள்:
திருமண அழுத்தம் தணிக்க ஒரு புது வழி? - 'நட்புத் திருமணம்' செஞ்சிக்கோங்க!
Stridhan law India

மனைவியின் நகைகளுக்கு கணவரோ, மாமியாரோ சட்டப்படி உரிமை கொண்டாட முடியாது. திருமணத்தின் போது பெண்ணுக்கு சொந்தமாக வழங்கப்படும் நகைகள் சீதனம் (Stridhan) என்று அழைக்கப்படுகிறது. இந்த நகைகள் அனைத்தும் அந்தப் பெண்ணின் பிரத்யேகமான மற்றும் முழுமையான சொத்து.

தனது நகைகளை விற்கவோ, தானம் செய்யவோ அல்லது யாருக்காவது கொடுக்கவோ அந்தப் பெண்ணுக்கு மட்டுமே முழு அதிகாரம் உண்டு.

ஒரு பெண் தன் கணவரிடமிருந்தோ, மாமியாரிடமிருந்தோ அல்லது தனது சொந்த வீட்டாரிடமிருந்தோ பெற்ற நகைகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட சொத்துக்களே. இதற்கு கணவர் எவ்வகையிலும் உரிமை கோர முடியாது.

அதேபோல் மாமியார் அல்லது கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணின் நகைகளை அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கவோ, உரிமை கொண்டாடவோ சட்டத்தில் இடமில்லை.

பாதுகாப்புக்காக அந்த நகைகள் மாமியார் அல்லது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பெண் கேட்கும் போது அதைத் திருப்பிக் கொடுக்க அவர்கள் சட்டப்படி கடமைப்பட்டுள்ளனர்.

சீதன நகைகள்
சீதன நகைகள்AI Image

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023, செக்சன் 316-இன் கீழ் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்தை முறையற்ற வகையில் வைத்துக் கொள்வது அல்லது கையாடல் செய்வது, நம்பிக்கை மோசடி செய்வது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

திருமண முறிவு அல்லது குடும்பப் பிரச்சனை போன்ற காலங்களில் கணவரோ அல்லது மாமியாரோ அந்த நகைகளைத் தர மறுத்தால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406 (IPC 406) மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் (Domestic Violence Act) அந்தப் பெண் தனது நகைகளை மீட்டெடுக்க நீதிமன்றத்தை நாடலாம்.

பெண்ணுக்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து திருமணத்தின்போது கிடைக்கும் பணம், தங்க ஆபரணங்கள், நிலம், பாத்திரங்கள் மற்றும் இதர பொருள்கள் கணவன், மனைவி என இருவருக்கும் சொந்தமானது கிடையாது. திருமணத்தின்போது அல்லது திருமணத்துக்குப் பிறகு, அல்லது முன்னதாக பெண்ணுக்குக் கிடைக்கும் சீதனத்துக்கு, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு முழு அதிகாரம் உள்ளது.

அவற்றை, யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது குறித்து அப்பெண் முடிவு செய்ய முழு அதிகாரம் இருக்கிறது. அதை கணவர் கட்டுப்படுத்த முடியாது. அதே சமயம், நெருக்கடியான நேரத்தில் கணவர் அதைப் பயன்படுத்திவிட்டு, மீண்டும் மனைவியிடமே திரும்ப கொடுத்துவிடலாம்.

இதையும் படியுங்கள்:
புதிய சட்டம் அமல்..! இனி 2-வது திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை...ரூ.1.5 லட்சம் அபராதம்..!
Stridhan law India

எனவே, சீதனமாகக் கிடைக்கும் சொத்துகளுக்கு கணவர் - மனைவி கூட்டு உரிமையாளர்கள் கிடையாது. அதோடு, கணவரும் அதற்கு உரிமை கோர முடியாது. சீதனத்தை தவறாகப் பயன்படுத்தினால் சட்டப்பிரிவு 406-ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தனது முந்திய தீர்ப்பில் கூறியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com