வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க ஆசையா? அடமானமின்றி ரூ.50 லட்சம் வரை கல்விக்கடன் பெற எளிய வழிகள்!

வெளிநாட்டு படிப்புக்கு அடமானமில்லா வங்கி கடன்!
வெளிநாட்டில் உயர்கல்வி
வெளிநாட்டில் உயர்கல்விAI Image
Updated on

வெளிநாட்டில் உயர்கல்வி பெறுவது பல குடும்பங்களின் கனவாக மாறியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.வெளிநாடுகளில் கல்வி பயில கல்வி கடன் ஒருபுறம் இருந்தாலும், கடனை திருப்பி செலுத்த போதுமான நிதி சூழல் இல்லாத காரணத்தால் பலரும் இந்த வாய்ப்பை தவறவிட்டு விடுகின்றனர். இனி உங்களுக்கு அந்தப் பயம் தேவையில்லை!

வெளிநாட்டு கல்விக்காக பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் ரூ.7.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அடமானம் இல்லாமலோ அல்லது சொத்துப் பிணையத்துடனோ (Collateral) கடன்கள் வழங்கப்படுகின்றன. வட்டி விகிதங்கள் மற்றும் பிணையப் பொறுப்புகளுக்கு ஏற்ப இக்கடன்கள் கிடைக்கின்றன. நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களும் வெளிநாடுகளில் உயர்கல்வி கனவை நனவாக்க இந்த வங்கி கடன்கள் பெருமளவில் உதவுகின்றன.

1) கடன் வகைகள்:

பிணையக் கடன்(Secured Loan):

சொத்து, வீடு அல்லது நிலத்தை ஈடாக வைத்து ரூபாய் 40 லட்சத்திற்கு மேல் அதிக தொகை பெறலாம். வட்டி விகிதம் குறைவாக (9.25% முதல் 12% வரை) இருக்கும்.

பிணையமில்லா கடன்(Unsecure loan): நல்ல பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் முதல் ரூபாய் 50 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கிடைக்கும். வட்டி சற்று கூடுதலாக இருக்கும்.

2) கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் வட்டி விகிதங்கள்:

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் 3 முக்கிய வழிகளில் கடன்களைப் பெறலாம். அரசுடைமை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் போன்ற மூன்று முக்கிய வழிகளில் கடன்களைப் பெற முடியும்.

அரசு மற்றும் தனியார் வங்கிகள்:

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI), ஐசிஐசிஐ பேங்க்(ICICI Bank) மற்றும் பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) போன்ற வங்கிகள் வெளிநாட்டு கல்விக்கு கடன் வழங்குகின்றன.

வட்டி விகிதம்: பொதுவாக 8.95% முதல் 13.5% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

பிணையம்(Collateral): ரூபாய் 40 முதல் ரூபாய் 75 லட்சத்திற்குள் இருந்தால் சில வங்கிகள் பிணையம் இல்லாமல்(unsecured) கடன் வழங்குகின்றன. அதற்கு மேற்பட்ட தொகைக்கு சொத்து அல்லது நகையை ஈடாக வைக்க வேண்டும்.

வெளிநாட்டு உயர்கல்விக் கடன்
வெளிநாட்டு உயர்கல்விக் கடன்

3) தேவையான முக்கியமான ஆவணங்கள்:

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.

  • பாஸ்போர்ட் நகல் மற்றும் ஆதார், பெற்றோரின் பான்(PAN) அட்டை

சேர்க்கைக் கடிதம்:

வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கிடைத்த அட்மிஷன் அல்லது அனுமதிக் கடிதம் (Offer Letter) பெற்றிருக்க வேண்டும்.

கல்வி சான்றிதழ்கள்:

10, 12 மற்றும் இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்.

தேர்வு மதிப்பெண்கள்:

IELTS, GRE, GMAT போன்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்.

வருமானம் ஈட்டும் இணை விண்ணப்பதாரர்(Co-applicant): பெற்றோர் உடன்பிறந்தோர் அல்லது உறவினர் இணை விண்ணப்பதாரராக இருக்க வேண்டும். இந்தியாவில் இவர்களுக்கு நிலையான வருமானம் மற்றும் நல்ல வங்கி பரிவர்த்தனை இருக்க வேண்டும். அதாவது பெற்றோரின் வருமானச் சான்றிதழ் மற்றும் ஐடி ரிட்டன்ஸ் (IT Returns) இணை விண்ணப்பதாரர் தேவை.

4) விண்ணப்பிக்கும் முறைகள்:

தகுதி:

மாணவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். இணை விண்ணப்பதாரராக (Co-borrower) பெற்றோர் இருக்க வேண்டும்.

வித்யா லட்சுமி போர்டல்(Vidya Lakshmi Portal):

மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அதிகாரபூர்வமான இணையதளம் மூலம் ஒரே இடத்தில் பல வங்கிகளின் கல்விக் கடன் விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.

நேரடி அணுகல்:

நீங்கள் படிக்கும் கல்லூரியின் பரிந்துரை கடிதம் மற்றும் நிதிநிலை ஆவணங்களுடன், உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளைகளை அணுகலாம்.

இதையும் படியுங்கள்:
ரூ. 7.5 லட்சம் வரை பிணையமில்லா கல்விக் கடன்! யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
வெளிநாட்டில் உயர்கல்வி
இதையும் படியுங்கள்:
நீங்க வேலையில்லா பட்டதாரியா?...தமிழக அரசின் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!
வெளிநாட்டில் உயர்கல்வி
logo
Kalki Online
kalkionline.com