பூத் ஸ்லிப் இல்லாமல் ஓட்டு போட முடியுமா..? முடியாதா..? தேர்தல் ஆணையம் சொல்வதென்ன..?

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
booth slip
booth slip
Updated on

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரங்களிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.

234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக 75,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தேர்தல் ஆணையம் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக முழுவதும் செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: வீடு தேடி வரும் பூத் ஸ்லிப்! தேர்தல் ஆணையத்தின் மெகா அப்டேட்.!
booth slip

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத் சிலிப் (Booth Slip) வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலரும் இன்னும் தங்களுக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று கூறிவருகின்றனர். ஒருவேளை உங்களுக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரவில்லை என்றாலோ, அல்லது நீங்கள் வெளியூரில் தங்கியிருப்பதாலோ கவலைப்பட தேவையில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக நீங்களே வெறும் 2 நிமிடங்களில் உங்களது பூத் ஸ்லிப்பை எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளும் வசதியையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை மைய இணையதளமான https://electoralsearch.eci.gov.in/ என்ற முகவரிக்கு செல்லவும். "Search in Electoral Roll" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே சென்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்து பூத் ஸ்லிப்பை பதிவிறக்கம் செய்ய கொள்ளலாம்.

அல்லது ஆண்ட்ராய்டு மொபைலில் 'Voter Helpline' என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செயலியை இன்ஸ்டால் செய்து, உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்து செயலியின் முகப்பு பக்கத்தில் உள்ள Search Your Name in Electoral Roll என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட்டால் உங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் ஸ்லிப் தெரியும்.

இதை உங்கள் போனில் சேமித்து வைத்து வாக்களிக்கும் நாள் அன்று இதை காண்பித்து வாக்களிக்கலாம்.

அதேசமயம் பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் கண்டிப்பாக வாக்களிக்க முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பூத் சிலிப்பில் வாக்காளர்கள் ஓட்டுப் போட வேண்டிய வாக்குச்சாவடி விவரம், பாகம் எண், வரிசை எண், அமைவிட பகுதி என அனைத்து விவரங்களும் இருக்கும். வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் போது 'பூத் சிலிப்' எடுத்துச் சென்று வாக்களிக்க வேண்டும்.

உங்களிடம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இருந்தால், அதை காண்பித்து வாக்களிக்கலாம். ஒருவேளை உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஆதார், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். அவை...

1. ஆதார் அட்டை

2. பான் கார்டு

3. பாஸ்போர்ட்

4. டிரைவிங் லைசென்ஸ்

5. புகைப்படத்துடன் கூடிய வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவை இதர அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை

6. பேன் கார்டு(PAN Card),

7. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

8. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை

9. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை / ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை

10. மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,

11. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை.

12. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை.

இதையும் படியுங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலையே வேண்டாம்... இந்த 12 ஆவணங்கள் இருந்தாலே நீங்களும் ஓட்டு போடலாம்!
booth slip

இவற்றில் ஏதாவது ஒரு அரசு ஆவணத்தை காட்டி நீங்கள் இந்த தேர்தலில் வாக்களித்து ஜனநாயகக்கடமையை ஆற்றலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com