சீமான் முன்மொழியும் '5 தலைநகரங்கள்' திட்டம் - இது மக்களுக்கு நல்லதா..? கெட்டதா..?

சமீபத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று நா.த.க.வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்.
Seeman
SeemanAI image
Published on

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த சட்டமன்ற தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி தலைவர்களும், கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாதக சார்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒவ்வொரு தொகுதிக்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமான் மேற்கொண்ட பரப்புரையில், இலவசம் என்பதே ஏமாற்று. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் இலவசத்தை எதிர்க்கிறேன்.

தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் ஆகிய 3 விஷயங்களை மட்டுமே கட்டணமில்லாமல் மக்களுக்கு கொடுப்பேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இலவச பேருந்து வசதி கொடுக்க மாட்டேன் என்று கூறிய சீமான், ஏசி பஸ்ஸில் கட்டணம் செலுத்தி மக்கள் பயணிக்கும் சூழலை உருவாக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: விஜய் யாருக்கு ‘ஸ்கெட்ச்’ போடுகிறார்? சீமான் விமர்சனம்.!
Seeman

சமீபத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று நா.த.க.வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்.

ஆனால் தலைநகரங்களை உருவாக்குவதில் பொதுமக்களுக்கு என்ன பயன் எந்த குழப்பம் பலருக்கும் இருக்கும். வாங்க அதுகுறித்து அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டிற்கு ஐந்து தலைநகரங்கள் இருப்பது, அதிகாரப் பரவலாக்கல், சமச்சீர் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு புரட்சிகரமான தொலைநோக்கு பார்வையாகும்.

தமிழ்நாட்டின் உடைய கடைக்கோடியில் இருக்கும் ராதநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களை எல்லாம் சென்னையுடன் ஒப்பிட்டு பார்த்தால் மருத்துவத்திலும், கல்வியிலும், வேலைவாய்ப்பிலையும் சென்னை ரொம்பவே அட்வான்ஸில் உள்ளது.

இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. 5 தலைநகரங்கள் அமைக்கும் பட்சத்தில் சென்னை போன்ற ஒரு குறிப்பிட்ட மாநகரத்தை மட்டும் சார்ந்திருக்காமல், அனைத்துப் பகுதிகளும் ஒரே நேரத்தில் வளர்ச்சி அடையும்.

உதாரணத்திற்கு பார்த்தால் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை தமிழ்நாட்டின் உடைய தலைநகரங்களாக மாற்றும் பட்சத்தில் சென்னை அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவிற்கு இந்த மாவட்டங்கள் எல்லாம் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும்.

திருச்சி நிர்வாகத் தலைநகராகவும், சென்னை தொழில்நுட்பத் தலைநகராகவும், கோவை வணிகத் தலைநகராகவும், மதுரை பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி அறிவுசார் தலைநகராகவும் திகழும்.

அதாவது, 5 தலைநகரங்கள் அமைக்கும்போது, அரசு அலுவலகங்கள் பரவலாக இருப்பதால் மக்கள் தங்கள் பணிகளுக்குத் தலைநகருக்கு அலைய வேண்டிய அவசியம் குறையும்.

வெவ்வேறு தலைநகரங்களில் வெவ்வேறு துறைகள் சார்ந்த தொழில் முதலீடுகள் வரும், இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

மதுரை மற்றும் குமரி போன்ற இடங்கள், தமிழர் பண்பாடு, கலை மற்றும் மெய்யியல் சார்ந்த ஆராய்ச்சி மையங்களாக மேம்படுத்தப்படும்.

சாலை வசதிகள் மற்றும் பொது போக்குவரத்து, புதிய தலைநகரங்களைச் சுற்றி மேம்படுத்தப்படும்.

இப்போது சென்னை தலைநகரமாக இருப்பதால் சென்னை மட்டும் வளர்ச்சி அடையாமல் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களும் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். அதேபோல் தலைநகரங்களாக மாற்றப்படும் மாவட்டங்களை சுற்றி உள்ள மாவட்டங்கள் எல்லாம் வளர்ச்சி அடைய ஆரம்பித்தால் கண்டிப்பாக ஒரு மாற்றம் தெரியும். இந்த முறையானது எளிமையான நிர்வாக மேம்பாட்டிற்கும், சீரான வளர்ச்சிக்கும் வழிவகை செய்கிறது.

ஆனால் நிர்வாக ரீதியாக ஐந்து தலைநகரங்களை ஒருங்கிணைப்பதில் தொடக்க காலத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் அதிக நிதி மற்றும் உள்கட்டமைப்பு தேவைப்படும்.

ஆனால் இது மாநிலத்தின் உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பன்முகப்படுத்தி, சென்னையை நோக்கிய மக்கள் இடம்பெயர்வை வெகுவாகக் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
என் வீட்டிற்கு ஏன் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ரெய்டு வரவில்லை? சீமான் கேள்வி!
Seeman

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாடு ஒரே நேரத்தில் தொழில், தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் முன்னோடி மாநிலமாக மாறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com