கிராம பெண்களுக்கு விலையில்லா கறவை மாடு திட்டம்: தகுதி, விண்ணப்பிப்பது எப்படி..?

தமிழகத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்திற்கு ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இலவச கறவை மாடு திட்டம்
பெண்களுக்கு இலவச கறவை மாடு திட்டம்AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழகத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆண்டுதோறும் 10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியிலும், பால் கொள்முதல் செய்வதிலும், தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும், ஊரகப்பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்து இருந்தார்.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதி வாய்ந்த 10,000 பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும். இதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிப்பு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதிச் செய்யப்படும்.

ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு விலையில்லாக் கறவை மாடுகளை வழங்கும் இத்திட்டமானது, சிறப்பான உற்பத்தித் திறன் கொண்ட பால் சொத்துகளை உருவாக்குவதன் மூலம் ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் மேம்படுத்துதல், மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்துதல், அறிவியல்பூர்வமான பால் பண்ணை முறைகளை ஊக்குவித்தல், குடும்ப ஊட்டச்சத்துப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறனுள்ள ஒரு ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பினக் கறவை மாடு வழங்கப்படும்.

இதன் மூலம் பயனாளி குடும்பத்திற்கு வழக்கமான வருமான ஆதாரம் உறுதி செய்வதுடன், முறையான கால்நடை பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் மூன்று முதல் நான்கு கன்றுகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது நீண்ட காலச் சொத்து உருவாக்கம் மற்றும் நிலையான பொருளாதார நன்மைகளுக்கும் வழிவகுக்கும்.

Tamil nadu CM Vijay
Tamil nadu CM Vijay

கறவை மாடு திட்டம் - முக்கிய சிறப்பம்சங்கள்:

* இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 8 லிட்டர் பால் கறக்கும் திறன் கொண்ட ஆரோக்கியமான கலப்பினக் கறவை மாடு வழங்கப்படும்.

* பயனாளிகள் நேரடியாக ஆவின் முதன்மைப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களாக இணைக்கப்படுவர்.

தகுதிகள்:

* விண்ணப்பதாரர் தமிழகத்தின் ஊரகப் (கிராமப்புற) பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

* பயனாளியின் வயது 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது யார்? ஆண்களா? பெண்களா?
பெண்களுக்கு இலவச கறவை மாடு திட்டம்

* குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறிப்பாக ஆதரவற்றவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் (widows) ஆகியோருக்கு முன்னுரிமை உண்டு.

* விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்பத்தினர் பெயரில் 1 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது.

* தற்போது தங்களது சொந்தப் பெயரில் கறவை மாடுகள் அல்லது எருமைகள் வைத்திருக்கக் கூடாது.

* விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ (கணவர், பெற்றோர், குழந்தைகள்) மத்திய/மாநில அரசுப் பணியிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ பணியில் இருக்கக் கூடாது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பப் பக்கம் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை.

வழக்கமாக இவ்வகையான கால்நடை வழங்கும் திட்டங்கள் கிராம சபைகள் மூலமாகவோ அல்லது கிராமப்புற மகளிர் சுயஉதவிக் குழுக்கள் / வட்டார கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் ஆவின் (Aavin) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் முன்னேற்றத்தை பாழாக்கியதை கொண்டாடுகிறீர்களா ? ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கேள்வி
பெண்களுக்கு இலவச கறவை மாடு திட்டம்

பயனாளிகள் தங்கள் பகுதிக்குரிய வட்டார கால்நடை மருத்துவமனை அல்லது ஊராட்சி அலுவலகத்தை நேரில் அணுகி விவரங்களைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com