டாக்டர் ஆக ஆசையா.? நுழைவுத்தேர்வு இல்லை! – இந்த மருத்துவப் படிப்புக்கு உடனே விண்ணப்பீங்க.!

Veterinary Doctor Courses
Veterinary Doctor Courses
Updated on

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு வருகின்ற மே 25-ம் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த நிலையில் மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்புக்கான அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடப் பிரிவுகள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2 முக்கிய பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

1. கால்நடை மருத்துவம்: ​

*B.V.Sc. & A.H. (Bachelor of Veterinary Science & Animal Husbandry) – 4.5 ஆண்டுகள் படிப்பு + ஓராண்டு கட்டாய சுழற்சி முறை இன்டர்ன்ஷிப் என மொத்தம் 5.5 ஆண்டுகள்.

2. தொழில்நுட்பப் படிப்புகள் (4 ஆண்டுகள்): ​

*B.Tech (Dairy Technology): பால்வளத் தொழில்நுட்பம் ​

*B.Tech (Food Technology): உணவுத் தொழில்நுட்பம் ​

* B.Tech (Poultry Technology): கோழியினத் தொழில்நுட்பம்.

கல்வித் தகுதி:

* கால்நடை இளநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், +2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான பாடப் பிரிவுகளில் கீழ்க்கண்ட பாடங்களை படித்திருக்க வேண்டும்.

* 5.5 ஆண்டு கால B.V.Sc & A.H. படிப்பிற்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* 4 ஆண்டு கால B.Tech படிப்புகளுக்கு உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் அல்லது கணித அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* பொதுப் பிரிவினர் +2 தேர்வில் தேர்ச்சியுடன் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

சேர்க்கை வழிமுறை:

கால்நடை இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது. இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும். இந்தப் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக கலந்தாய்வு நடைபெற்று, மாணவர்களுக்கான இடம் ஒதுக்கப்படும்.

கால்நடை இளநிலை மருத்துவப் படிப்பிற்கான மொத்த இடங்களில் 15%, இந்திய கால்நடை கவுன்சில் மூலமும், B.Tech படிப்புகளுக்கான இடங்களில் சுமார் ஒரு பகுதி ICAR மூலமும் தேசிய அளவில் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! இனி சைக்கிள் விலையில் இ-பைக் கிடைக்கும்.!
Veterinary Doctor Courses

தேவையான ஆவணங்கள்:

1. 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்

2. சாதிச் சான்றிதழ்

3. மாற்றுச் சான்றிதழ் (TC)

4. இருப்பிடச் சான்றிதழ்

5. அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் வர வேண்டுமானால், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றை அளிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு - ரூ.1,000

எஸ்சி/எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு ரூ.500

விண்ணப்பம் தொடங்கும் தேதி - 25.05.226 (காலை 10 மணி முதல்)

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.06.2026 (மாலை 5 வரை)

https://adm.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பட்டதாரிகளுக்கு பம்பர் ஆஃபர்: மத்திய அரசில் 12,256 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?
Veterinary Doctor Courses
logo
Kalki Online
kalkionline.com