‘இது கல்யாணமா, இல்ல திருவிழாவா?’ அம்பானி ரேஞ்சுக்குக் களைகட்டிய எம்எல்ஏ மகள் திருமணம்!

பீகாரில், அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் அவருடைய இல்லத்திருமண விழாவை அம்பானி வீட்டுத் திருமணத்தை மீஞ்சும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார்.
பிரம்மாண்டத் திருமணம்|பீகார் திருமணம்
பிரம்மாண்டத் திருமணம்|பீகார் திருமணம்Image credit: Chatgpt
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

இந்தியாவில் திருமணம் என்பது சடங்குகளும் சம்பிரதாயங்களும் கலந்த ஒரு மெகா பட்ஜெட் 'குடும்பப் பண்டிகை'. மத பேதமின்றி, 'நம்ம வீட்டுக் கல்யாணம் எப்படி இருக்கணும் தெரியுமா?' என்று சமூகத்துக்கு ஒரு டிரெய்லர் காட்டும் மேடையாகவே பலரும் இதைப் பார்க்கிறார்கள்.

ஆனந்த் அம்பானி – ராதிகா மர்ச்சன்ட் திருமணம் மாதக்கணக்கில் நீண்டு, உலகப் பிரபலங்களின் வருகையால் இணையத்தையே ஆக்கிரமித்ததைப் பார்த்தோம். ஆனால், அம்பானி வீட்டுத் திருமணத்தை மட்டுமில்லை; சாதாரணக் குடும்பங்களில்கூட, 'கடன் வாங்கியாவது கல்யாணத்தைக் களைகட்ட வைப்போம்' என்ற மனநிலைதான் பெரும்பாலும் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாகச் சொல்லப்படும் பீகாரில் நடந்த ஒரு கல்யாணம், (பீகார் திருமணம்) 'அம்பானி ரேஞ்சுக்குச் செலவு செய்திருக்காங்களே!' என்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சுமார் 5 லட்சம் பேர் திரண்டதாகச் சொல்லப்படும் அந்தத் திருமணக் காட்சிகள், 'ஒரு கல்யாணத்துக்கா இத்தனை கூட்டம்? இது ஊரா, இல்ல திருவிழா மைதானமா?' என்று பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

பீகாரின் மொகாமா தொகுதி எம்எல்ஏ-வும், ‘சோட்டே சர்க்கார்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான அனந்த் சிங், தன் மகள் சிவாங்கி சிங்கின் திருமணத்தைத்தான் இப்படி ஊரே திரும்பிப் பார்க்கும்படி நடத்தியுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகப் பட்டதாரியான மணமகள் சிவாங்கி லேண்ட் குரூய்சரில் வர, அட்லாண்டாவில் எம்பிஏ முடித்த மணமகன் ரிஷிகேஷ் குமார் 151 கார்களின் அணிவகுப்புடன் வந்திறங்கியுள்ளார்.

மாப்பிள்ளைக்குச் சுமார் ரூ.2.3 கோடி முதல் ரூ.3 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் மற்றும் தங்கம், வெள்ளிப் பரிசுகள் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன.

Shivangi Singh marriage
Shivangi Singh marriageImage Credit: ChatGPT

பாட்னாவிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள நடவா கிராமத்தில், நவம்பர் 25-ஆம் தேதி நடந்த இந்த விழாவில் சட்டமன்ற சபாநாயகர் முதல் பல முக்கியப் பிரமுகர்கள் வரை 4 முதல் 5 லட்சம் பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டதுடன், பாட்னா செல்லும் சாலைகளில் பல மணி நேரம் டிராஃபிக் ஜாமும் ஏற்பட்டுள்ளது.

விருந்தினர்களைத் தரையிறக்க ஆறு ஹெலிபேடுகள், நூற்றுக்கணக்கான சமையல்காரர்கள், 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள், கூடவே 80 லட்சம் இனிப்புகள் என விருந்துப் பட்டியல் நீள்கிறது.

இதையும் படியுங்கள்:
திருமணத்தின் போது, மணமக்கள் செய்துகொள்ளும் ஏழு வேண்டுதல்கள் தெரியுமா?
பிரம்மாண்டத் திருமணம்|பீகார் திருமணம்

இதில் ஹைலைட்டாக, 52 குதிரைகள் பங்கேற்கும் குதிரைப் பந்தயமும் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் பரிசுக்கு மஹிந்திரா தார், அடுத்து பைக், ஸ்கூட்டர் எனப் பரிசு மழை வேறு.

ஆனால், பார்வையாளர்கள் மைதானத்துக்குள் புகுந்து, மின் கம்பங்களிலும் ஏறி நின்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால், பந்தயம் கடைசி நேரத்தில் தள்ளிப்போனது.

Shivangi Singh marriage image credit-@K24Tv

ஒரு பக்கம் தடபுடல் விருந்து, மறுபக்கம் குதிரைப் பந்தயம் என விழா களைகட்டியிருந்தாலும், 'இவ்வளவு கூட்டத்தில் பாதுகாப்பு எங்கே?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம் இந்த திருமணத்திற்கான செலவுக் கணக்கை மட்டும் அனந்த் சிங் வெளியே சொல்லவில்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பீகாரில் இப்படி ஒரு பிரம்மாண்டத் திருமணமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்திலும், இணையத்திலும் சூடுபிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் உண்மையா? ரகசியத்தை உடைத்த ஒய்.ஜி.மகேந்திரன்!
பிரம்மாண்டத் திருமணம்|பீகார் திருமணம்

இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? என்று பலரும் விசாரணைக் கோரிக்கை வைக்க, நெட்டிசன்களோ அம்பானி வீட்டு கல்யாணத்துடன் இதை ஒப்பிட்டு மீம்ஸ்களும் கமெண்டுகளுமாகத் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.