

சொத்துக்களை பதிவு செய்வதால் மட்டுமே ஒருவர் அந்த சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது. சொத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை நிரூபிக்க, பதிவை விடவும் பட்டா, வில்லங்கச் சான்றிதழ் (EC), மூலப் பத்திரங்கள் (Parent Documents) போன்ற பிற ஆவணங்கள் முக்கியம். அதாவது, அது மட்டுமே அந்த சொத்தை முழுமையாக உரிமை கொண்டாடுவதற்கான ஆவணம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் புதிய விதியின் படி உங்களுடைய சொத்தை உங்களுடைய பெயரில் ரிஜிஸ்டர் செய்தால் மட்டும் நீங்க அந்த சொத்துக்கான சட்டப்படியான உரிமையாளர்(Legal Owner) ஆகிவிட முடியாது.
அதாவது, ஒரு சொத்தை பதிவு செய்வதால் மட்டுமே அந்த சொத்துக்கு ஒருவர் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. பதிவு ஆவணங்கள் கூடுதலான ஆதாரமாக மட்டுமே கருதப்படும் என்றும் கூறியுள்ளது.
சொத்து உங்களுடையது என்பதை நிரூபிக்க, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி சொத்து உரிமைக்கான பிற ஆவணங்கள், விற்பனைப் பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்கச் சான்றிதழ்(EC) போன்ற அனைத்து ஆவணங்களும் உங்களிடம் உள்ளதா எனப் பார்க்கவும்.
ஒரு சொத்தை வாங்க போகிறோம் என்றால் சப் ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று அந்த சொத்தின் உரிமையாளர் யார், என்பது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அந்த சொத்துக்கான, சட்டபூர்வமான வாரிசுகள் எல்லாம் யார், என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
சொத்து அமைந்துள்ள சர்வே எண்கள், குறிப்பிட்ட சொத்தின் சொத்துரிமை யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற உள்ளூர் அரசு அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்கள், சொத்து விற்கப்படுவதன் வாயிலாக அதன் உரிமை மாற்றப்படுகிறது என்றால், எவ்வளவு ரூபாய்க்கு அது விற்கப்படுகிறது, என்னென்ன நிபந்தனைகள் போன்ற விபரங்கள் அடங்கிய, 'சேல் அக்ரிமென்ட்' இருக்க வேண்டும்.
ஒருவேளை அந்த சொத்து ஒரு பரம்பரை சொத்தாக வருவதாக இருந்தால், அதாவது, தாத்தா, பாட்டி மூலமாக வருவதாக இருந்தாலும் நம்ம பிறந்தவர்களிடமும் NOC சான்றிதழ் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். உயிர் எல்லாம் சரியாக எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
அதில் விற்பவர்கள், வாங்குபவர்களின் கையொப்பம், சாட்சிகளின் கையொப்பம், 'ஸ்டாம்ப் டியூட்டி', பத்திரப்பதிவு ஆவணங்களில் மேற்கொள்ளப்படும் பதிவு ஆவணங்கள் இருக்க வேண்டும்.
இவை அனைத்திற்கும் பின், சொத்துரிமைக்கான பத்திரப்பதிவு அலுவலகம் வழங்கும் சான்றிதழ், குறிப்பிட்ட அந்த சொத்தின் மீது வங்கிக் கடனோ அல்லது இதர பிரச்னைகளோ நிலுவையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்த பின்னர் அதுபோல் எதுவும் இல்லை என்ற தடையில்லா சான்றிதழ், சொத்து வரி செலுத்துவதற்கான ஆவணங்கள் மிக அவசியம்.
இவை அனைத்தையும் அரசு அலுவலகத்தில் கொடுத்து, சொத்தின் உரிமை பற்றிய விபரங்களை பதிவு செய்யும், 'மியூட்டேஷன்' சான்றிதழ் ஆகியவை அனைத்தும் சேர்ந்திருந்தால் தான் ஒரு சொத்து முழுமையாக இன்னொருவருக்கு அதன் உரிமை மாற்றப்பட்டதாக கருதப்படும் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் அந்த சொத்தை வாங்கிய பின்னர் நகராட்சி அலுவலகம்(municipal office) சென்று சொத்து சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும்.
உதாரணமாக நீங்க ஒரு பில்லரிடம் இருந்து ஒரு பிளாட் வாங்குகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அந்த பிளாட்டிற்கான தண்ணீர் பில், மின் கட்டணம் போன்ற எந்த விஷயங்களில் எல்லாம் உங்களது பெயரை மாற்ற வேண்டுமோ அதில் எல்லாம் மாற்றி விட வேண்டும்.
ஒரு சொத்தை முழுமையாக பயன்படுத்துவது, வேறு ஒருவருக்கு மாற்றி விடுவது போன்றவற்றிற்கு இந்தப் பதிவு ஆவணங்கள் மட்டுமே போதுமானது கிடையாது. மாறாக, அந்த சொத்து தொடர்பான அத்தனை ஆவணங்களும் முழுமையாக இருக்க வேண்டும். அப்போது தான் அதை ஒருவர் உரிமை கொண்டாட முடியும்.
சொத்து வாங்கும் போது உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், ஒரு வழக்கறிஞரை அணுகி, சொத்துரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துக்கொள்வது நல்லது.