போர் முடிவுக்கு வந்து விட்டதா.. டிரம்ப் எழுதிய 'அந்த கடிதம்'.! உண்மை என்ன.?

America - Iran War
Donald Trump
Updated on

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடங்கியது. இந்தப் போரின் விளைவாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலகளவில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணொயின் விலை 125 டாலரையும் கடந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர, முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தையும் இழுபறியில் நீடித்து வந்தது.

போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த நிலையில், பேச்சுவார்த்தையில் இனி நேரடியாக அமெரிக்கா தலையிடாது என கடந்த வாரம் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மூலமாக புதிய சமரச திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பித்தது ஈரான். இதில் அணுசக்தி திட்டம் குறித்த விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டும் என ஈரான் முன்மொழிந்திருப்பது, அமெரிக்காவிற்கு திருப்தி அளிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், நேற்றுடன் 60 நாட்களை கடந்துள்ளது. போர் அதிகாரச் சட்டத்தின் படி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி 60 நாட்களுக்கு மேல் போரை தொடர முடியாது. இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக போர் முடிந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் போர் முடிவுக்கு வந்து விட்டால், உலகளவில் எரிபொருள் விலை குறைந்து விடும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுதம் இல்லாத ஈரானே எங்களுடைய இலக்கு எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
இளநீர் குடிக்கணும்னா இனி யோசிக்கனும் போல.. கிடுகிடுவென உயர்ந்த விலை..!!
America - Iran War

போர் முடிந்து விட்டது என ட்ரம் கடிதம் எழுதி இருந்தாலும் ஈரான் கடல் முற்றுகையை அமெரிக்கா இன்னும் தொடர்கிறது. இந்நிலையில் மீண்டும் எந்நேரத்திலும் தாக்குதல் தொடங்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிரான போர் ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கார் மற்றும் லாரிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவே இந்த வரிவிதிப்பு எனவும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்

இதையும் படியுங்கள்:
ஷாக்கிங் நியூஸ்..!!கூடுதலாக 40 நாட்களுக்கு நீடிக்க போகும் கோடை வெயில்.!
America - Iran War
logo
Kalki Online
kalkionline.com