"இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை" டிரம்ப் அதிரடி.!

America - Iran War
Donald Trump
Updated on

மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ் நீரிணை எப்போதும் எங்கள் வசமே இருக்கும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேசமயம் இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக அவரும் அவர் குடும்பத்தாரும் உயிர் பிழைத்தனர். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நடைபெற்ற வரும் நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் குறித்த முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவிய நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த ஈரான், தங்களது கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால் மட்டுமே அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோம் என ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இனி பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் இனி அமெரிக்கா நேருக்கு நேர் தலையிடாது. ஈரானிடம் அணு ஆயுதங்களே இருக்கக் கூடாது. அதுவே பேச்சுவார்த்தையின் அடிப்படையாகும்.

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஈரான் தரப்பில் இருந்து போதுமான ஆதரவு இல்லை” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹார்மூஸ் நீரிணை குறித்து ஈரான் உச்சபட்ச தலைவர் மொஜ்தபா காமெனி கூறுகையில், “ஹார்மூஸ் நீரிணையில் இஸ்ரேலுக்கு சொந்தமான அனைத்து கப்பல்களுக்கும் தடை விதிக்கப்படும். ஹார்மூஸ் நீரிணை மீதான முழு அதிகாரமும் ஈரானிடம் மட்டுமே இருக்கும். எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணை வழியாக செல்ல ஈரானிடம் உரிய அனுமதி பெற வேண்டியது அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை வருமான வரித் துறை கண்காணிக்கிறதா?உண்மை நிலை என்ன?
America - Iran War

கடந்த வாரம் சனிக்கிழமை அன்று ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்க இஸ்ரேல் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும் காமெனி குடும்பத்தை முழுமையாக ஒழிக்க, அமெரிக்காவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரேலிய கப்பல்களுக்கு ஹார்மூஸ் நீரணையில் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டிருப்பது போர் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது

இதையும் படியுங்கள்:
உங்க அக்கவுண்டுக்கு திடீர்னு பணம் வந்துருச்சா? உஷார்! புது வகை மோசடியாக இருக்கலாம்!
America - Iran War

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com