தங்கம் விலை ஏறினால் என்ன? பழைய சிம் கார்டில் தங்கம் எடுக்கலாம்! - இணையத்தை அதிர வைத்த சீன நபரின் ஐடியா..!

சீனாவில் பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது எப்படி என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
gold from SIM cards
gold from SIM cardsAI Image
Published on

கடந்தாண்டு ஆரம்பத்தில் இருந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை இன்று சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக மாறிவிட்டது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் ஒரு கிராம் ரூ.6 ஆயிரம் வரை சென்ற தங்கம் விலை இன்று ரூ.14 ஆயிரத்தை தாண்டி விட்டது.

கடந்த 29-ம்தேதி வரலாற்று இல்லாத உச்சமாக ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ.16,800க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400யாக உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்தது. சென்னையில் நேற்று(பிப்ரவரி 3-ம்தேதி) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,14,160-க்கும் ஒரு கிராம் ரூ.14,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதனை தொடர்ந்து அடுத்து வந்த இரு நாட்களுக்கு தங்கத்தின் விலை சரிந்து பொதுமக்களை சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனாலும் பொதுமக்கள் தங்கம் விலையின் இந்த ஏற்ற இறக்கத்தால் திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைக்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இப்படி தங்கத்தின் விலை ஒரு முடிவே இல்லாதபடி அதிகரித்துகொண்டே வருவதால் இனிவரும் காலங்களில் சமானிய மக்கள் தங்கம் வாங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! உங்கள் தங்கம் உண்மையானதா? போலியா..? இனி வீட்டிலிருந்தே கண்டறியலாம்..!
gold from SIM cards

இந்நிலையில், சீனாவில் பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பது எப்படி என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தென் கிழக்கு சீனாவின் குவான் மாகாணத்தில் உள்ள ஹுய்சோவை சேர்ந்தவர் கியாவோ என்ற நபர். அவர் கழிவுகளில் இருந்து விலை மதிப்பற்ற உலோகங்களை பிரித்தெடுத்து சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் வெளியிட்ட பழைய சிம்கார்டுகளில் இருந்து தங்கத்தை எவ்வாறு பிரிந்தெடுக்கும் வீடியோ ஒன்று 5 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால் இந்த செயல்முறை மிகவும் ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது என்றும் சாதாரண மக்கள் இதை முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் கியாவோ பழைய சிம் கார்டுகளை ரசாயனங்கள் நிரப்பப்பட்ட டிரம்களில் வைத்து, பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு தங்கம் போன்ற சேற்றை பிரித்தெடுத்து அதை வடிகட்டி, சூடாக்கி, இறுதியாக தங்க மண்ணை தனியாகப் பிரித்து, அதை உருக்கி திடமான தங்கமாக மாற்றினார்.

இறுதியில் அவருக்கு 191 கிராம் தங்கம் கிடைக்கிறது. இந்த தங்கத்தை பிரித்தெடுக்க 2 டன் ஸ்கிராப், அதாவது சிம் கார்டுகள், மின்னணு துறையில் இருந்து வரும் சிப் கழிவுகளில் கலவையை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒரு சிம் கார்டில் 0.001 கிராம் அளவுக்கு தான் தங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உலகையே மிரள செய்திருப்பதுடன் பழைய சிம்கார்டுகளை வாங்குவதற்கான போட்டி மக்களிடையே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்:
துறவியின் கைகளில் தங்கம்... இறைவனின் விசித்திர விளையாட்டு!
gold from SIM cards

தங்கம் விலை தற்போது உச்சம் அடைந்து வரும் நிலையில் இந்த வீடியோ மக்களிடைய பேசுபொருளாக மாறி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com