உலகெங்கிலும் மனித குலத்திற்கு பேராபத்து... இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகை குறையும்!

People
People
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

உலக நாடுகள் மத்தியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைவாகி கொண்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் மனித குலத்திற்கு பேராபத்து வருமா என்று அஞ்சப்படுகிறது.

முன்பெல்லாம் இந்தியாவில் ஒரு நபர் 10 குழந்தைகள் வரை பெற்று வளர்த்தனர். ஆனால், படிபடியாக இந்த எண்ணிக்கை குறைந்து தற்போது ஒரு குழந்தையில் வந்து நிற்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு குழந்தையை படித்து ஆளாக்கி வளர்ப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.

இதனால் மக்கள் தொகை குறைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் ஏற்கனவே இந்த அச்சம் வந்துவிட்டது.

ஆம்! தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தங்கள் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. 2024இல் மக்கள் தொகை 14 லட்சம் குறைந்து 140 கோடியே 8 லட்சமாக இருந்தது என்கிறது சீன அரசு.

இதையும் படியுங்கள்:
விராட் கோலி எடுத்த முக்கிய முடிவு… ரசிகர்கள் மகிழ்ச்சி!
People

இந்த நிலை சீனாவில் மட்டுமல்ல ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

ஐநாவின் அறிக்கையில் உலக நாடுகளில் 63 நாடுகளின் மக்கள் தொகை முதலில் உச்சத்தை அடைந்து பின் சரிவை கண்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் 30 ஆண்டுகளில் இந்த லிஸ்ட்டில் இன்னும் 48 நாடுகள் சேர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது உலகின் மக்கள் தொகை 820 கோடியாக உள்ளதாகவும் இது 60 ஆண்டுகளில் ஆயிரத்து 30 கோடி என்ற உச்சத்தை எட்டி அது பின்னர் சரியத் தொடங்கும் என்றும் ஐநா நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பள்ளியின் சிறந்த நடிகன் – பள்ளி நாட்களை நினைவுக்கூர்ந்த ரஜினிகாந்த்!
People

மக்கள் தொகை குறைவிற்கு முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என இருவருமே காரணம் என்பதால், இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுப்பதாக உலக நாடுகள் கணித்துள்ளனர்.

இதனால் அஞ்சும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மக்கள் தொகையை பெருக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. மேலும் இந்த வீழ்ச்சி மனித குலத்துக்கு ஆபத்தை விளைவிக்குமா என்ற கேள்விக்கு எலான் மஸ்க் ஆம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இன்னும் 50 ஆண்டுகளில் மக்கள் தொகை சரிய ஆரம்பிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com