திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு! – அக்டோபர் 12 முதல் 20 வரை செல்ல போறீங்களா? கண்டிப்பா இதை படிங்க!

திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (அக்டோபர் 7) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி
திருப்பதி
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (அக்டோபர் 7) புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று வரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.

ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அதுமட்டுமின்றி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தின உற்சவம், வார உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவங்கள் என எப்போதும் திருவிழா நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு 470 விழாக்கள், உற்சவங்கள், சேவைகள் நடந்து கொண்டே இருப்பது இங்கு விசேஷம். அதனால்தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலை ‘நித்ய கல்யாணம், பச்சை தோரணம்’ கொண்ட கோயில் என பக்தர்கள் அழைக்கின்றனர். திருப்பதி ஏழுமலையானுக்கு இவ்வாறு 365 நாட்களில் 470-க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் நடைபெறுவதால், திருமலை எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பிரம்மோற்சவம் 9 நாட்கள் கோலாகலமாக நடத்தப்படும். சில வருடம் நவராத்திரி பிரம்மோற்சவம், சாலக்கட்டு பிரம்மோற்சவம் என 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படும்.

மலையப்ப சுவாமி|திருப்பதி கோவில்
மலையப்ப சுவாமி|திருப்பதி கோவில்AI Image

இந்நிலையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 12 முதல் 20-ம்தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முக்கிய விழாவான அக்டோபர் 16-ல் பிரம்மோற்சவ கருட சேவை நடைபெறுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 20-ம்தேதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் சக்கர ஸ்நானம் மற்றும் வேதாந்த தேசிகர் சாற்றுமுறை, அக்டோபர் 21-ல் பூதத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், அக்டோபர் 26-ல் பௌர்ணமி கருட சேவையும் நடைபெறுகிறது.

புரட்டாசி கடைசி வாரத்தில் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
திருப்பதி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காப்பீடு - தேவஸ்தான நிர்வாகம் முடிவு..!
திருப்பதி

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான (ரூ.300) சிறப்பு நுழைவு டிக்கெட்டுகள் இன்று (அக்டோபர் 7) புதன்கிழமை இணையத்தில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இதன்படி திருப்பதி ஏழுமலையான தரிசிக்க விரும்பும் பக்தர்கள் வரும் அக்டோபர் 12, 13, 14, 18, 19, 20 ஆகிய 6 நாட்களுக்கான சிறப்பு தரிசனத்துக்கு (ரூ.300) இன்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் முறை: பக்தர்கள் தங்களின் டிக்கெட்டுகளை TTD அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in/ அல்லது "TTDevasthanams" மொபைல் செயலி மூலம் மட்டுமே முன்பதிவு செய்வது பாதுகாப்பானது என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியக் குறிப்பு: நவராத்திரி பிரம்மோற்சம் மற்றும் புரட்டாசி மாதத்தின் கடைசி வாரம் ஆகியவை இணைந்து வருவதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வரும் அக்டோபர் 11-ம்தேதி முதல் 20-ம்தேதி வரை பரிந்துரை கடிதங்களுக்கான விஐபி பிரேக் தரிசனம் (Protocol VIP-க்கள் தவிர்த்து) மற்றும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ரத்து செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி ஏழுமலையானும் மண்பானை தயிர் சாதமும்: புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு ரகசியம்!
திருப்பதி

எனவே, நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிடும் பக்தர்கள் TTD Booking Portal-ல் தங்களின் மொபைல் எண் மற்றும் அடையாள அட்டையைப் பயன்படுத்தி இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com