தமிழக அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழு பலன் தருமா? மாநில ஊதியக் குழு எப்போது?

8வது ஊதியக் குழு: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்குமா? மாநில ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும்?
8வது ஊதியக் குழு
8th pay commission AI Image
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகளை மறுசீரமைக்க மத்திய அரசால் ஊதியக் குழு அமைக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு 2025 நவம்பர் 3 ஆம் தேதி 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமை வகிக்க, 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அறிக்கையைத் தயார் செய்து வருகிறது.

8வது ஊதியக் குழுவின் அறிக்கை 2027 மே மாதம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்து, சம்பள உயர்வு நடைமுறைக்கு வர குறைந்தபட்சம் 3 இலிருந்து 6 மாதங்கள் வரை ஆகி விடும். இந்நிலையில் மத்திய அரசின் ஊதியக் குழுவால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் பலன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்குப் பலன் கிடைக்குமா?

8வது ஊதியக் குழுவால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் நிச்சயமாக பலன் கிடைக்கும். 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது, இதன் பலன் நேரடியாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இருப்பினும் மத்திய அரசு 8வது ஊதியக் குழு பரிந்துரைகளின் படி சம்பள மாற்றத்தை அறிவித்த பிறகு, தமிழக அரசு இதனைப் பின்பற்றி மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களு ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தும்.

ஆகையால் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், நேரடியாக தமிழக அரசு ஊழியர்களுக்கு பலன் தராவிட்டாலும், மறைமுகமாக பலன் தரும்.

8வது ஊதியக் குழுவில் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ தான் முக்கிய பங்கு வகிக்கும். இதன் அளவைப் பொறுத்தே ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அளவுக்கு ஏற்ப, மாநில அரசும் ஊழியர்களுக்கு பலன்களை வழங்கும்.

8வது ஊதியக் குழு
8th Pay Commission
இதையும் படியுங்கள்:
வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்! வெற்றி வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
8வது ஊதியக் குழு

மாநில ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும்?

8வது ஊதியக் குழு இறுதிப் பரிந்துரை அறிக்கையை சமர்ப்பிக்க 2027 மே மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் மாதத்தில் அமைக்கப்பட்ட 8வது ஊதியக் குழுவுக்கு 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்திய பிறகே, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக மாநில ஊதியக் குழு அல்லது அலுவலர் குழுவை அமைக்கும். ஆகையால் தமிழ்நாட்டில் ஊதியக் குழு 2028-ல் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ரூ.75,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!
8வது ஊதியக் குழு

எதிர்பார்க்கப்படும் காலம்:

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அடுத்த ஆண்டு இறுதி அல்லது 2028 தொடக்கத்தில் அமல்படுத்த அதிக வாய்ப்புளளது. இருப்பினும் 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் சம்பள உயர்வு பொருந்தும் என்பதால், சம்பள உயர்வு அமலுக்கு வருவதற்கு முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மட்டுமின்றி, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத் தொகையும் கணிசமாக உயரும்.

ஃபிட்மெண்ட் ஃபேக்டரை 4.0 ஆக உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஃபிட்மெண்ட் ஃபேக்டரை 2.65 முதல் 2.83 வரை மட்டுமே நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. ஃபிட்மெண்ட் ஃபேக்டரை உயர்த்தினால், அது மத்திய அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தி விடும்.