10வது படிச்சிருந்தா போதும்!தமிழக அரசே வழங்கும் லேப்டாப் 'சிப்-லெவல்' பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க தமிழக அரசு இதுபோன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
EDII-TN
EDII-TNAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு ஐந்து நாள் லேப்டாப் ஹார்ட்வேர் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் எப்படி பங்கேற்பது, தகுதி என்ன? என்னென்ன கற்றுத்தரப்படும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை) மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) சார்பில் சென்னையில் ஐந்து நாட்கள் ‘லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி’ வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த நல்வாய்ப்பாகும். சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க தமிழக அரசு இதுபோன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி நடைபெறும் நாள் :

அக்டோபர் 12-ம்தேதி (திங்கள் கிழமை) முதல் 16-ம்தேதி (வெள்ளி கிழமை) வரை

பயிற்சி நடைபெறும் நேரம் :

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி நடைபெறும்.

வயது வரம்பு, கல்வித்தகுதி :

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இந்த பயிற்சியில் சேரலாம்.

18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தபட்ச கணினி அறிவு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ள ஆண், பெண், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் அனைவரும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்ய :

இந்த பயிற்சியில் சேர முன்பதிவு கட்டாயம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் http://www.editn.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 8668100181, 9360221280 என்ற கைபேசி நம்பர் மூலமாகவும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி (லேப்டாப் பயிற்சி) பாடத்திட்டத்தில் என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அறிந்து கொள்ளலாம்.

லேப்டாப் பயிற்சி
லேப்டாப் பயிற்சிimage credit-@TNDIPRNEWS

முதல் நாள் லேப்டாப் அறிமுகம், பாகங்களை பிரித்தல் மற்றும் பொருத்துதல், அடாப்டர் (Adaptor) பரிசோதனை, RAM மற்றும் ROM வகைகள், மதர்போர்டு சிப்-செட்கள், பிழைக் குறியீடுகள் (Error Codes) மற்றும் இயங்குதளம் (OS) நிறுவுதல் ஆகியவை கற்பிக்கப்படும்.

இரண்டாம் நாளில் சிப்-லெவல் சேவைகள், SMT கூறுகள் மற்றும் ரெசிஸ்டர், கேபாசிட்டர், டையோடு, டிரான்சிஸ்டர்கள் போன்ற கூறுகளின் செயல்முறைப் பயிற்சி மற்றும் மல்டிமீட்டர் மூலம் பழுது கண்டறிதல் பற்றிய தனிப்பட்ட செயல்திறன் மதிப்பீடு இடம்பெறும்.

இதையும் படியுங்கள்:
சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? ரூ.5 கோடி கடன் தரும் வெற்றி மகளிர் திட்டம்..!
EDII-TN

மூன்றாம் நாளில் மின்னழுத்தம் (Voltage), மின்னோட்டம் (Current), ஆம்பியர் (Amps) மற்றும் வாட்ஸ் (Watts), NPN & PNP MOSFET, UJT, FET செயல்பாடுகள் மற்றும் லேப்டாப்பின் பல்வேறு பாகங்களில் பயன்படுத்தப்படும் மின்னழுத்தங்கள் (USB, CPU Fan, Power IC, HDD, DVD, BIOS IC, CMOS Battery, Keyboard, Power Switch, Wi-Fi, Processor, RAM, Speaker, Chipset, LED Light, Touchpad, Camera மற்றும் Wi-Fi Switch) விளக்கப்படும்.

நான்காம் நாளில் Schematic Tracing மற்றும் Schematic Diagram மூலம் மதர்போர்டை ஆய்வு செய்யும் முறையும், செயலிழந்த (Dead) லேப்டாப்புகளில் பழுது கண்டறியும் நுட்பங்களும் கற்றுத்தரப்படும்.

இறுதி நாளான ஐந்தாம் நாளில் சார்ஜிங் (Charging Section) மற்றும் ஸ்டாண்ட்பை பவர் பிரிவு (Standby Power Section) ஆய்வு, பல்வேறு சிக்னல்களை (SUS CLK, RTC RESET, INTRUDER, INTUREN, AC OK, S5 ENABLE, PGOOD, RSM ST, PWRBTOUT, SLP S4, SLP S3) ஆய்வு செய்தல், பயாஸ் ப்ரோக்ராமிங் (BIOS Flashing) மற்றும் மத்திய/மாநில அரசுகளின் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் விளக்கப்படும்.

பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்குக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதியும் உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்துப் பெற்று கொள்ளலாம்.

முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.editn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

இதையும் படியுங்கள்:
சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு உத்தரவு!
EDII-TN

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,

இ-டிஐ.ஐ அலுவலக சாலை,

சிட்கோ தொழிற்பேட்டை ஈக்காட்டுத்தாங்கல்,

சென்னை - 600 032.

logo
Kalki Online
kalkionline.com