சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் இயங்கி வந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் இனி இயங்காது என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Sub-Registrar Office
Sub-Registrar Office
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

ஆன்லைன் பத்திரப்பதிவு விரிவாக்கம் காரணமாக சனிக்கிழமைகளில் இயங்கி வந்த 100 சார்-பதிவாளர் அலுவலகங்கள் இனி இயங்காது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சார்-பதிவாளர்களின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கில் சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்-பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சனிக்கிழமைகளில் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்த சனிக்கிழமை கட்டாயப் பணி கைவிடப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 595 சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமே பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு, சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு வருகின்றனர்.

பொதுமக்கள் வார விடுமுறை நாட்களில் ஆவணப் பதிவுகளை எளிதாகச் மேற்கொள்ளும் வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக்கப்பட்ட அரசாணையின்படி, பணிச்சுமை அதிகம் கொண்ட 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் இயங்கி வரும் 100 பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடப்படும் என அரசு அறிவித்திருந்தது.

வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கில்,

சார்பதிவாளர் அலுவலகம்
சார்பதிவாளர் அலுவலகம்image credit-Justdial.com

சனிக்கிழமைகளில் இயங்கி வந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் எனவும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும் எனவும் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவித்த நிலையில் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘07.09.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் 2026-27-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை எண். 11. முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு விவாதத்தின் போது வணிகவரி மற்றும் பதிவு அமைச்சர் கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

பதிவுத்துறை தற்போது "எங்கிருந்தும் பதிவு" என்னும் குறிக்கோளை நோக்கி முன்நகர்கிறது என்றும், சார்பதிவாளர்கள் ஆவணப் பதிவு மட்டுமின்றி. பல்வேறு கூடுதல் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..!! இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை: வீட்டிலிருந்தே 18 வகையான சேவைகளை பெறலாம்..!
Sub-Registrar Office

சனிக்கிழமைகளிலும் பதிவு மேற்கொள்ளப்படுவதால், தொடர்ந்து அலுவலகப்பணிகளில் ஆவணப் பின்னடைவு ஏற்படுகிறது.

அதன்படி, வருங்காலங்களில் அனைத்து ஆவணங்களும் வருகையில்லா பதிவு மற்றும் காகிதமில்லா முறையில் பதிவு மேற்கொள்ள சார்பதிவாளர்களால் உத்தேசிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பதிவு சேவைகளின் தரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும் என அறிவித்து இருந்தார். அதன்படி, தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப் பணி முறையை 01.11.2026 முதல் கைவிடலாம் என அரசு முடிவு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை : வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு..!
Sub-Registrar Office

தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து, இணையவழிப் பதிவு மற்றும் நேரில் வராமல் பதிவு செய்யும் முறை (Presence-less Registration) விரிவுபடுத்தப்படுவதால், தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் செயல்பட்டு வந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் எதிர்வரும் நவம்பர் 1 முதல் சனிக்கிழமை வேலை நாட்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, இனி வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மட்டுமே செயல்படும்.

logo
Kalki Online
kalkionline.com