

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக சிறுநீரக பாதிப்பு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறார்கள். சிறுநீரக பாதிப்பு உள்ள வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நோயாளிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வசதி இல்லாமல் அரசு ஆஸ்பத்திரியை நம்பியே வாழ்கிறார்கள்.
2 சிறுநீரகமும் செயலிழந்த நோயாளிகள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள ரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். வாரத்துக்கு 2 அல்லது 3 முறை டயாலிசிஸ் செய்து சிறுநீரகம் தானமாக கிடைக்கும் வரை உயிருக்காக போராடுகின்ற நிலை உள்ளது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக டயாலிசிஸ் செய்து கொள்கிறார்கள். ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் டயாலிசிஸ் செய்து கொள்ள காத்திருக்க வேண்டிய நிலையும் தாமதமும் ஏற்படுகிறது. அதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிக கட்டணம் செலுத்தி டயாலிசிஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகும் சிறுநீரகச் சிகிச்சைகளைப் பெற முடியாத ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையை மாற்ற அரசு ஆஸ்பத்திரிகளில் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் செய்ய வழிவகை செய்யப்பட உள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோயாளிகளுக்கான இலவச மற்றும் குறைந்த கட்டண டயாலிசிஸ் (Dialysis) சிகிச்சைத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதாவது, அரசு ஆஸ்பத்திரிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை அனைத்தையும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் (TNMSC) கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோயாளிகளுக்கான டயாலிசிஸ் சிகிச்சை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) இல்லாதவர்களுக்கும் ஒரு சிகிச்சைக்கு ரூ. 1,100 என்ற குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை செயல்வடிவம் பெற்றால், அரசு மருத்துவமனைகளில் இனி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு இல்லாதவா்களும் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சைகளைப் பெற முடியும். எவ்வாறு சி.டி.ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனைகள் மலிவான கட்டணத்தில் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறதோ, அதுபோலவே டயாலிசிஸ் சிகிச்சைகளையும் வழங்க உள்ளதாக TNMSC அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்த புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் இனி முதலமைச்சரின் விரிவான காப்பீடு இல்லாதவர்களும் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சைகளை பெற முடியும்.
தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீடு உள்ளவா்களுக்கு மட்டுமே அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படுகிறது.
இந்த புதிய நடைமுறை TNMSC கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டால், அனைவருக்குமான சேவையாக அது செயல்படுத்தப்படும்.
அதுமட்டுமின்றி காப்பீட்டுத் திட்டத்தில் இணையாத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் ரூ. 1,100 கட்டணத்தில் டயாலிசிஸ் செய்து கொள்ளலாம்.
சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் மலிவான கட்டணத்தில் அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்படுகிறது. அது போலவே டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகள், மாநகராட்சி மருத்துவ மையங்கள் என 146 இடங்களில் அரசு சாா்பில் டயாலிசிஸ் மையங்கள் செயல்படுகின்றன. இங்கு ஏறத்தாழ 1,400 டயாலிசிஸ் சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
அதன் வாயிலாக கடந்த நிதியாண்டில் மட்டும் 9,400 நோயாளிக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட டயாலிசிஸ் சிகிச்சைகள், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்தும் கட்டணமின்றி அளிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஸ்கேன் பரிசோதனைகளுக்கு தனியாரை விட பல மடங்கு குறைவாக அரசு மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைப்போலவே டயாலிசிஸ் சிகிச்சைகளையும் வழங்க ஆலோசித்து வருவதாக TNMSC அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான திட்ட முன்மொழிவு அரசின் பரிசீனையில் உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.