சென்னையில் வீடு வாங்க ரெடியா? குலுக்கல் முறையில் வீடுகளை விற்கும் TNHB - தகுதிகள் என்ன? முழு விவரம்!

சென்னையில் 616 TNHB வீடுகள் விற்பனை! அசோக் நகர், பெசன்ட் நகர் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
TNHB வீடு விற்பனை
Own House
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலருடைய கனவாகும். இந்தக் கனவுக்கு வழியமைத்து கொடுக்கும் விதமாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) 616 குடியிருப்புகளை குலுக்கல் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி சென்னையில் உள்ள அசோக் நகர், அரும்பாக்கம், பெசன்ட் நகர் மற்றும் பாடிக்குப்பத்தில் இருக்கும் உயர் வருவாய்ப் பிரிவு (HIG), மத்திய வருவாய்ப் பிரிவு (MIG) குடியிருப்புகள் இணையதளக் குலுக்கல் முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

* விண்ணப்பம் தொடக்கம்: 28.11.2026 - காலை 10.00 மணி

* விண்ணப்பம் நிறைவு: 27.12.2026 - இரவு 11.59 மணி

விண்ணப்பிக்கும் முறை:

* TNHB இணையதளத்தில் (tnhb.tn.gov.in) மொபைல் எண் வழிய்க பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.

* குடியிருப்பு விவரங்களைத் தெரிந்து கொண்டு, தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்துடன் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய இணையதளங்கள்:

* propertysales.tnhb.tn.gov.in

* tnhb.tn.gov.in

கட்டண விவரம்:

* HIG பிரிவுக்கு விண்ணப்பக் கட்டம் ரூ.590 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.236 என மொத்தம் ரூ.826 செலுத்த வேண்டும்.

* MIG பிரிவுக்கு விண்ணப்பக் கட்டம் ரூ.354 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.236 என மொத்தம் ரூ.590 செலுத்த வேண்டும்.

TNHB Housing Scheme
Housing Scheme

குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தும் முறை:

* விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட 15 நிமிடங்களுக்குள் குடியிருப்பு விலையில் 10% முன்பணத்தை செலுத்த வேண்டும்.

* மீதமுள்ள 90% தொகையை ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 105 நாட்களுக்குள் செலுத்தினால் போதுமானது.

* குடியிருப்புக்கான விலையை Internet Banking, Debit Card, IMPS மற்றும் மின்-சலான் வழியாக செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு:

* கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-599-6060

* வாட்ஸ்அப் எண்: 95662 89561

இடஒதுக்கீடு விவரங்கள்:

பட்டியல் சாதியினர் (SC) - 18%, பட்டியலின பழங்குடியினர் (ST) - 1%, மாநில அரசு ஊழியர்கள் - 18%, மத்திய அரசு, மின்வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் - 8%, முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் - 7%, சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்துபவர்கள் - 4%, பணிபுரியும் பத்திரிகையாளர்கள் - 3%, மொழிப்போர் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் - 1%, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழியர்கள் - 2%, பொதுமக்கள் - 38% இட ஒதுக்கீட்டின் படி வீடுகள் வழங்கப்படும்.

குறிப்பு: அனைத்துப் பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% முன்னுரிமை வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! இனி சொந்த வீடு கனவு நிஜமாகும்: இலவச பட்டா திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு!
TNHB வீடு விற்பனை

இடம் வாரியாக விலை விவரங்கள்:

அசோக் நகர்:

1758–1761 சதுர அடியில் 216 HIG வீடுகள் உள்ள நிலையில் ஒரு வீட்டின் விலை ரூ.2.23 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரும்பாக்கம்:

1458–1741 சதுர அடியில் 304 HIG வீடுகள் உள்ள நிலையில் ஒரு வீட்டின் விலை ரூ.1.89 – 2.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாடிக்குப்பம்:

1476–1592 சதுர அடியில் 80 HIG வீடுகள் உள்ள நிலையில் ஒரு வீட்டின் விலை ரூ.1.62 – 1.75 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெசன்ட் நகர்:

1899 சதுர அடியில் 8 HIG வீடுகள் உள்ள நிலையில் ஒரு வீட்டின் விலை ரூ.3.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 1430 சதுர அடியில் உள்ள 8 MIG வீடுகளுக்கு ஒரு வீட்டின் விலை ரூ.2.43 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்! வெற்றி வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
TNHB வீடு விற்பனை

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

* தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும், 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

* விண்ணப்பதாரர், கணவர் / மனைவி அல்லது மைனர் குழந்தைகள் பெயரில் இதற்கு முன்பு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திடம் மனை, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு ஏதும் வாங்கியிருக்கக் கூடாது.

மாதாந்திர வருமானத் தகுதி:

* MIG பிரிவுக்கு ரூ.50,001 முதல் ரூ.70,000 வரை.

* HIG பிரிவுக்கு ரூ. 70,000-க்கு மேல்.

குறிப்பு: HIG பிரிவினர், EWS பிரிவைத் தவிர்த்து, குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளையும் வாங்க விண்ணப்பிக்கலாம். இவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்.