

சொந்த வீடு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு இலக்காகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இந்தக் கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB) தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில், மிகக் குறைந்த விலையில், தரமான அடுக்குமாடி குடியிருப்புகள் (Flats), தனி வீடுகள் (Houses), மற்றும் காலி மனைகளை (Plots) ஆன்லைன் குலுக்கல் முறையில் விற்பனை (TNHB வீடு) செய்து வருகிறது.
தற்போது இந்தச் செயல்முறைகள் அனைத்தும் ஆன்லைன் குலுக்கல் முறை (Online Lottery/Draw) மற்றும் இ-ஏலம் (E-Auction) மூலமாக மிகவும் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://tnhb.tn.gov.in) பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய குடியிருப்புகள் கட்ட விருப்பப் பதிவு (Demand Assessment) தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புகளை வாங்குபவர்களுக்கு, தமிழக அரசு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், சுயநிதி திட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று 2026-2027 ஆம் ஆண்டு கடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கை கூட்டத் தொடரின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முக்கிய விவரங்கள் :
இடங்கள்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் சென்னை, கடலூர், மதுரை, திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் புதிய குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு மேற்கண்ட அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை மாவட்டம் - அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எர்ணாவூர், கடலூர் மாவட்டம் - குண்டுசாலை, மதுரை மாவட்டத்தில் எல்லீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டம் - திருமழிசை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் - வல்லன்குமாரவில்லை ஆகிய இடங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் கட்டப்படும்.
மேலும், இத்திட்டங்களை திட்டமிடும் முன், பொதுமக்களின் தேவை மதிப்பீடு (Demand Assessment) அறிந்து, அவர்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் அமைப்பதற்காக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://tnhb.tn.gov.in) ஒரு பிரத்யேக இயங்குதளத்தை (Portal) உருவாக்கியுள்ளது.
மேற்கண்ட இயங்குதளத்தின் மூலம், பொதுமக்கள் தங்களின் விருப்ப இடம், குடியிருப்பு வகை மற்றும் தொடர்புடைய பிற தேவைகளை பதிவு செய்யலாம். பெறப்படும் இந்தப் பதிவு பொதுமக்களின் தேவையை மதிப்பீடு செய்வதற்காக மட்டுமே தவிர வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான எந்தவொரு முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது.
ஆனால், மேற்படி மதிப்பீட்டுப் பதிவை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளவர்களுக்கு திட்டம் செயல்படுத்தப்படும்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதற்கான தேதி விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக பதிவு செய்த எண்ணிற்கு தெரிவிக்கப்படும்.
இணையதளத்தில் உங்கள் தேவையைப் பதிவு செய்தால், திட்டம் செயல்படுத்தப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்படும் தேதி, பதிவு செய்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும்.
பொதுமக்களின் தேவையை அறிய வீட்டுவசதி வாரிய இணையதளத்தில் பிரத்யேக பதிவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. விருப்ப இடம், குடியிருப்பு வகை உள்ளிட்ட தேவைகளை பதிவு செய்யலாம்.
எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, மேற்கண்ட பகுதிகளில் குடியிருப்புகள் பெற தகுதியும், ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையதளம் (https://tnhb.tn.gov.in) மூலம், தங்களின் விவரங்களை சமர்ப்பித்து, சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.