தமிழக அரசின் ‘இலவச மருத்துவ காப்பீடு’ ரத்து செய்யப்பட்டதா? கார்டை மீட்பதற்கான வழிகள்!

தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு ரத்தானவர்கள் மேல்முறையீடு செய்ய முடியுமா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க..
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்AI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் (CMCHIS) உங்களுடைய காப்பீடு ரத்து செய்யப்பட்டாலோ அல்லது மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதி (Claim/Pre-auth) மறுக்கப்பட்டாலோ, நீங்கள் நிச்சயமாக மேல்முறையீடு மற்றும் குறைதீர்ப்பு செய்ய முடியும்.

பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை கிடைக்கும் வேண்டும் என்பதற்காக திமுக அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி ‘கலைஞர் காப்பீடு திட்டம்’ என்ற பெயரில் காப்பீடு திட்டம் கொண்டு வந்தது. இந்த காப்பீடு திட்டத்தில் சுமார் 51 வகையான நோய்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் உயர் மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

பின்னர் 2011-ம் ஆண்டு இந்த திட்டம் மேம்படுத்தப்பட்டு ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்’ (CMCHIS) என பெயரிடப்பட்டது. 2018-ம் ஆண்டு மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ திட்டத்துடன் இணைக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு வரை குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 வரை இருப்பவர்கள் மட்டும்தான் இந்தக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற முடியும் என்று இருந்த நிலையில் 2022 ஜன.11 முதல் பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-ல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இதற்கிடையே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, தற்போதுள்ள ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தியது.

மருத்துவக் காப்பீடு- தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் :

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற வேண்டும்.

4 சக்கர வாகனம், வருமானம் தரக்கூடிய சொத்து இருக்கக்கூடாது.

தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் பெயர் குடும்ப அரிசி அட்டையில் (Smart Ration Card) இடம் பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் போன்றோருக்கு வருமான வரம்பு பொருந்தாது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதற்கிடையே இந்த திட்டத்தில் பயன்பெற்று வருபவர்களின் ஆதார் எண், மற்றும் இதர விவரங்களை வைத்து தமிழக அரசு பலரின் காப்பீடு அட்டையை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவரங்கள் காப்பீடு அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூட தெரிவதில்லை. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேரும் போது தான் தங்களது காப்பீடு அட்டை முடக்கப்பட்ட விவரத்தை தெரிந்துகொள்ள முடிகிறது.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது, தமிழக அரசின் என்ற இணைய தள முகவரியில் தங்களது ரேஷன் கார்டு மூலம் காப்பீடு திட்டத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். ரத்து செய்யப்பட்டிருந்தால் உரிய ஆவணங்களை இணைத்து மேல் முறையீட செய்யலாம் என்று கூறினார்.

CMCHIS|மருத்துவக் காப்பீடு
CMCHIS|மருத்துவக் காப்பீடுAI image

இதற்கான அதிகாரப்பூர்வ வழிகள் மற்றும் நடைமுறைகள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன:

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் (District Collector) தலைமையிலான ஒரு குறைதீர்ப்புக் குழு செயல்படுகிறது.

உங்கள் காப்பீடு அட்டை திடீரென ரத்து செய்யப்பட்டிருந்தாலோ அல்லது முறையான காரணமின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலோ, அதற்கான ஆதாரங்களுடன் (வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை) உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டுத் திட்டப் பிரிவில் நேரடியாக மனு அளிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மூத்த குடிமக்களுக்கான புதிய காப்பீடு திட்டம்; கட்டணமின்றி சிகிச்சை பெறலாம்: அமைச்சர் அருண்ராஜ்..!
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்

மாவட்டக் குழுவின் முடிவில் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றாலோ அல்லது காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (United India Insurance Company) உங்கள் கோரிக்கையை நிராகரித்தாலோ, மாநில அளவிலான குழுவிற்கு மேல்முறையீடு செய்யலாம்.

அதாவது, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட (TNHSP) அலுவலகத்தில் உள்ள மாநிலக் குழுவிற்கு உங்களது மேல்முறையீட்டு மனுவை அனுப்பலாம்.

இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cmchistn.com க்கு சென்று உங்களது புகார்கள் அல்லது மேல்முறையீடுகளைப் பதிவு செய்யலாம். (குறிப்பு: இணையப் பக்கம் தற்காப்பில் இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட கட்டணமில்லா எண்ணை அணுகவும்).

உங்களது காப்பீடு ஏன் ரத்தானது என்ற காரணத்தை அறியவும், மேல்முறையீடு செய்வதற்கான உடனடி ஆலோசனைகளைப் பெறவும் தமிழக அரசின் 24 மணி நேர இலவச உதவி எண் 1800 425 3993 தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
ரூ.25 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு: விண்ணப்பிப்பது எப்படி?
முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்

தற்போதைய புதிய விதிகளின்படி, இத்திட்டத்திற்கான தகுதிவாய்ந்த குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.1,20,000 ஆக இருக்க வேண்டும். உங்கள் வருமானம் இதற்குள் இருந்து, தவறுதலாகக் கார்டு ரத்து செய்யப்பட்டிருந்தால், கிராம நிர்வாக அலுவலர் (VAO) மூலம் புதிய வருமானச் சான்றிதழ் பெற்று மேல்முறையீட்டுடன் இணைப்பது அவசியமாகும்.

logo
Kalki Online
kalkionline.com