TNPSC Group 4 தேர்வு: 6,574 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு... ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC Official Portal மூலம் காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TNPSC
tnpsc
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC Official Portal மூலம் காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 4 நிலையிலான 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி (TNPSC) வெளியிட்டுள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற இலக்குடன் பல மாதங்களாகப் படித்து வரும் லட்சக்கணக்கான போட்டித் தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய நற்செய்தியாக அமைந்துள்ளது. இந்த பணிக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லாத காரணத்தால், எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையிலேயே நேரடிப் பணி நியமனம் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர் (Junior Assistant), கிராம நிர்வாக அலுவலர் (VAO), நேர்முக உதவியாளர், வனக்காவலர், பில் கலெக்டர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், தட்டச்சர் (Typist) மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)உள்ளிட்ட 46 வகையான பணிகளுக்கு காலியாகவுள்ள மொத்தம் 6,574 இடங்கள் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான காலியிடங்கள் அறிவிக்கப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்த அளவிலான இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது போட்டித்தேர்வர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயது வரம்பு :

இந்த தேர்வுக்கு 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகள் (VAO பதவிக்கு) மற்றும் 18 ஆண்டுகள் (இதர பதவிகளுக்கு). அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: அக்டோபர் 6 (இன்று) முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.

TNPSC
TNPSC

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் அடுத்த மாதம் நவம்பர் 5-ம்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை திருத்தம் செய்ய: ஆன்லைன் விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால், நவம்பர் 9-ந்தேதி நள்ளிரவு 12.01 மணியில் இருந்து நவம்பர் 11-ந்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை மூன்று நாட்கள் திருத்திக் கொள்ள வாய்ப்பு (Correction Window) வழங்கப்படும்.

தேர்வு தேதி: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் காலை 9.30 மணியில் இருந்து 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: இத்தேர்வு ஒரே ஒரு தாளைக் கொண்ட எழுத்துத் தேர்வாக நடைபெறும். முதன்மை, நேர்காணல் என அடுத்த நிலை எதுவும் கிடையாது. எனவே, இத்தேர்வுக்கு கடும் போட்டி காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு அறிவிப்பு வெளியீடு: முழுவிவரம் உள்ளே..!!
TNPSC

கல்வித் தகுதி: குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச கல்வித் தகுதியாகப் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு அரசுத் தொழில்நுட்பத் தட்டச்சுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

ஏற்கனவே ஒருமுறை பதிவு (OTR) செய்துள்ளவர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று, ஏற்கனவே தங்களிடம் உள்ள நிரந்தரப் பதிவு (One-Time Registration - OTR) கணக்கு மூலம் லாகின் செய்து விண்ணப்பிக்க வேண்டும். புதிய தேர்வர்கள் தங்களது ஆதார் விவரங்களை இணைத்து ரூ.150 கட்டணத்தில் புதிய OTR கணக்கை உருவாக்கிய பின்பே விண்ணப்பிக்க முடியும்.

தற்போது உள்ள காலிப்பணியிடங்கள் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு அடிப்படை கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், லட்சக்கணக்கான பட்டதாரிகளும் முதுகலை பட்டதாரிகளுமே இதில் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்வுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
8 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு: TNPSC மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முக தேர்வு பட்டியல் வெளியீடு!
TNPSC

எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு TNPSC அறிவுறுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com