

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD – Rural Development and Panchayat Raj Department) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பல்வேறு பதிவறை எழுத்தர் (Record Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தகுதி, விண்ணப்பிக்கும் முறை, யாரொல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
TNRD வேலைவாய்ப்பு :
வேலை பிரிவு: தமிழ்நாடு அரசு வேலை (TN Govt Jobs 2026)
துறைகள்: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
காலியிடங்கள்: பல்வேறு
பதவி: பதிவறை எழுத்தர் (Record Clerk)
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி (10th Pass)
சம்பளம்: தமிழக அரசு விதிமுறைகளின்படி மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: நேரில் / தபால் மூலம்
கடைசி தேதி: மாவட்டத்தைப் பொறுத்து மாறுபடும்
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: இந்தக் குறிப்பிட்ட காலியிடத்திற்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதி திராவிடர் (SC) பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
தகுதிகள்: விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஆதி திராவிடர் (SC): குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையும், முன்னாள் இராணுவ வீரர்கள் 18 முதல் 55 வயது வரையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை: தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு பணி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மாவட்ட வாரியாக:
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு செப்டம்பர் 18-ம் தேதியும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 29-ம்தேதியும், பெரம்பலுர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு செப்டம்பர் 30-ம்தேதி கடைசி நாளாகும்.
நேர்காணலுக்குத் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் Call Letter மூலம் தனியாகத் தெரிவிக்கப்படும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
* விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க உள்ள சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (District Official Website) பார்வையிட்டு, அங்கு வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை சரிபார்த்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
* விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.
* கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
* நிர்ணயிக்கப்பட்ட வயது மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை எடுத்துக்கொள்ளப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
* முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.