#JUST IN : இன்றைய தங்கம் விலை நிலவரம்.! உயர்ந்ததா.? சரிந்ததா.?

Gold Price today
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது உச்சத்தில் இருந்தாலும், கடந்த இரண்டு தினங்களாக சரிவை சந்தித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை ரூ.2,640 குறைந்தது. குறிப்பாக நேற்று (ஏப்ரல் 29) ஒரே நாளில் தங்கத்தின் விலை காலையில் ரூ.1,200 மற்றும் மாலையில் ரூ.400 குறைந்தது.

தங்கத்தின் இந்த திடீர் சரிவு, நடுத்தர வர்க்கத்தினருக்கு சற்று நிம்மதியை அளித்தது. நேற்று (ஏப்ரல் 29) ஒரு கிராம் தங்கம் ரூ.13,900-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,200-க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை ரூ.5 குறைந்து ரூ.260-க்கு விற்பனையானது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 35 டாலர் வரை குறைந்து, 4,550 டாலராக சரிந்தது. இதன் காரணமாகவே இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைந்தது.

இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,900-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : 2 கிமீ சுரங்கப்பாதையை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்! அதிரும் லெபனான்.!
Gold Price today

வாரத்தின் முதல் நாள் சற்று ஏறிய தங்கத்தின் விலை, அடுத்தடுத்த இரண்டு நாட்களில் சரிவை சந்தித்தது. தங்கத்தின் விலை வீழ்ச்சி, இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வரும் தங்கம்..! போட்டி போடும் ஆன்லைன் தளங்கள்..!
Gold Price today
logo
Kalki Online
kalkionline.com