ரூ.1,000 பாஸ்டேக் ரீசார்ஜ் வேண்டுமா..? படம் பிடிச்சு அனுப்புங்க... ரீசார்ஜ் வெல்லுங்க!

நெடுஞ்சாலைகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதிய திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

இந்திய தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் (Toll Plazas) உள்ள சுத்தமற்ற கழிப்பறைகளை 'ராஜ்மார்க்யாத்ரா' (Rajmarg Yatra) செயலி மூலம் புகைப்படம் எடுத்து புகாரளித்தால் ரூ.1,000 ஃபாஸ்டேக் (FASTag) ரீசார்ஜ் வெகுமதியாக வழங்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் (Toll Plazas) அடிப்படை வசதிகளான கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கட்டாய விதியாகும்.

சுங்கச்சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் அல்லது தூய்மையைப் பராமரிக்கத் தவறும் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் (Tenders) ரத்து செய்யப்பட்டு, அவை கருப்புப் பட்டியலில் (Blacklist) சேர்க்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

அதாவது சுங்கச்சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தாலோ அல்லது தண்ணீர் வசதி இல்லாமல் இருந்தாலோ, வாகன ஓட்டிகள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பராமரிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது போன்ற கடுமையான விதிகள் வாகன ஓட்டிகளின் பயணத்தை எளிதாக்கவும், அவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் வகுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இதுபோன்ற குறைபாடுகளை சுங்கச்சாவடியில் உள்ள புகார் புத்தகத்திலோ அல்லது NHAI-ன் அவசர உதவி எண்ணான 1033 மூலமாகவோ தொடர்பு கொண்டு உடனடியாகப் புகார் அளிக்கலாம்.

இதனிடையே மத்திய அரசின் 'சிறப்பு இயக்கம் 5.0' திட்டத்தின் கீழ், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) 'தூய்மையான கழிப்பறை புகைப்படச் சவால்' (Clean Toilet Picture Challenge) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது நீட்டிக்கப்பட்டு 2027-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தால், பயணம் மேற்கொள்ளும் பயணிகள் 'ராஜ்மார்க்யாத்ரா' செயலி வழியாக ஜியோ-டேக் (Geo-tagged) செய்யப்பட்ட புகைப்படத்தைப் பதிவேற்றிப் புகார் அளிக்கலாம். அவ்வாறு செய்யப்படும் புகார் உண்மை தன்மை சரிபார்க்கப்பட்டு புகாரளித்தவரின் வாகன எண்ணுக்கு ரூ.1,000 ஃபாஸ்டேக் ரீசார்ஜ் தொகையாக வழங்கப்படும்.

முக்கிய நிபந்தனைகள்:

* புகாரளிக்கும் போது, கழிப்பறையின் அசுத்தமான நிலையை தெளிவாகக் காட்டும் புகைப்படத்தை புவிக்குறியீடு (Geo-tag) மற்றும் நேர முத்திரையுடன் (Time-stamp) செயலி மூலம் பதிவேற்ற வேண்டும்.

* இந்த வெகுமதி NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்) நேரடியாகப் பராமரிக்கும் சுங்கச்சாவடி கழிப்பறைகளுக்கு மட்டுமே பொருந்தும். பெட்ரோல் பங்குகள் (Petrol Bunks), தாபாக்கள் (Dhabas) அல்லது தனியார் இடங்களில் உள்ள கழிப்பறைகளுக்கு இது பொருந்தாது.

இதையும் படியுங்கள்:
FASTag பயனர்கள் கவனத்திற்கு! இனி இந்த வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்க முடியாது..!
சுங்கச்சாவடி

எனவே, உங்களது புகாரை பதிவு செய்வதற்கு முன்பு அது என்.ஹெச்.ஏ.ஐ பராமரிப்பில் உள்ள கழிப்பறையா என்பதை உறுதிசெய்து கொள்வது அவசியமாகும்.

சுங்கச்சாவடி கழிப்பறை|ஃபாஸ்டேக் ரீசார்ஜ்
சுங்கச்சாவடி கழிப்பறை|ஃபாஸ்டேக் ரீசார்ஜ்AI image

* ஒவ்வொரு வாகனப் பதிவு எண்ணும் (VRN) இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு முறை மட்டுமே வெகுமதியைப் பெற முடியும்.

* போலியான, திருத்தப்பட்ட அல்லது ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் நிராகரிக்கப்படும்.

* AI மற்றும் அதிகாரிகள் மூலமாகப் புகார்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வெகுமதி நேரடியாக உங்கள் ஃபாஸ்டேக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தொகையை ரொக்கமாகப் பெறவோ, மற்றவர்களுக்கு மாற்றவோ முடியாது.

* ஒரு நாளைக்கு ஒரு சுங்கச்சாவடிக்கு முதலில் வரும் செல்லுபடியாகும் புகார் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதாவது ஒரே கழிப்பறை குறித்து ஒரே நாளில் பல புகார்கள் வந்திருக்கும் பட்சத்தில், முதலில் சமர்ப்பிக்கப்பட்ட தகுதியான புகார் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

* புகார் அளிப்பவர்கள் தங்களது பெயர், இருப்பிடம், வாகனப் பதிவு எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் தூய்மையை உறுதி செய்வதுடன், பொதுமக்களையும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பழசை பிய்க்க வேண்டாம், புதியதும் வாங்க வேண்டாம்: FASTag-க்கு வந்தது 'OneTag'!
சுங்கச்சாவடி

மேலும் சிறந்த பங்களிப்பிற்கு ஊக்கத்தொகை (Incentives) வழங்கப்படும்போது, அது பொதுமக்களையும், உள்ளூர் சமூகங்களையும் மேலும் உற்சாகத்துடன் செயல்படத் தூண்டுகிறது.

logo
Kalki Online
kalkionline.com