தொண்டர் வீட்டில் குளிக்கும் அமைச்சர்: வைரல் போட்டோ!

தொண்டர் வீட்டில் குளிக்கும் அமைச்சர்: வைரல் போட்டோ!
Updated on

த்தரப்பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா நந்தி, தன் கட்சித் தொண்டர் வீட்டில் குளிக்கும் காட்சி சமூக வலைதளங்களீல் வைரலாகியுள்ளது.

உத்திர பிரதேச மாநில அமைச்சர் நந்தகோபால் வெளியூர்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லும்போது, அங்குள்ள கட்சித் தொண்டர்களின் வீடுகளில், இரவு தங்கி விட்டு அடுத்த நாள் காலையில் அங்கேயே குளித்துவிட்டு டிபன் சாப்பிட்டுக் கிளம்புவது வழக்கம்.

அப்படி சமீபத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்திற்கு விசிட் அடித்த அமைச்சர் நந்தி அங்கு ஒரு தொண்டரின் வீட்டில் குளித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, வைரலாகியுள்ளது.

அந்த விடியோவில் தன் சொந்த வீடு போலவே குழாயில் தண்ணீர் பிடித்தும், பாத்ரூம் தரையில் அமர்ந்தும் அவர் இயல்பாக குளிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த விடியோவுடன் தன் டிவிட்டரில் அமைச்சர் நந்தி பதிவிட்டதாவது:

உத்தரபிரதேசத்தில் யோகி அரசுக்கும் அதற்கு முந்தைய அரசுகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்! இங்கு அமைச்சர்களும் சாதாரண மனிதர்கள்தான்!

-இவ்வாறு அமைச்சர் நந்தி பதிவிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com