ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் – நிதியமைச்சர் அறிவிப்பு..!

பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் தாக்கல்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சியின் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடமும், பிற அரசியல் கட்சிகளிடமும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஒவ்வொரு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த 16 நாட்களாக தினமும் 6 முதல் 7 மணி நேரம் விரிவான ஆலோசனை மேற்கொண்டு பட்ஜெட்டை இறுதி செய்துள்ளார். இதில் விவசாயம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறினார்

முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை 2026 - 27 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் ஒப்புதல் அளிப்பதற்காக வியாழக்கிழமை கூடியது. தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் பல நலத்திட்டங்கள், வளர்ச்சி முன்னெடுப்புகள் இதில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் ஒட்டுமொத்த தமிழத்தின் பார்வையும் இதன் பக்கம் திரும்பி உள்ளது. ஏற்கனவே மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமைகள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து நிதி பற்றாக்குறைகளைக் கையாண்டு, தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாக எழுந்துள்ளது.

வேளாண்மை பட்ஜெட்டில் நீர் பாசனம், வேளாண் உள்கட்டமைப்பு, பயிர் உற்பத்தி திறன் மற்றும் விவசாயி நலன் ஆகிய விவசாயத்துறையை வலுப்படுத்தும் செயல்முறைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது சேவைகளை மேம்படுத்துவதையும் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tamil nadu government
tamil nadu government

ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களுடன் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி வருவதாக சொல்லப்படுகிறது. மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசு பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகிவிட்ட சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி மற்றும் சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது குறித்த முழுமையான கால அட்டவணையை சபாநாயகர் தரப்பில் விரைவாக முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மத்திய கிழக்கில் ஈரான் தாக்குதல்: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? சிலிண்டருக்கு சிக்கல் வருமா.?
பட்ஜெட் தாக்கல்
இதையும் படியுங்கள்:
செக்யூரிட்டி அலர்ட்: இனி தலைமைச் செயலகத்திற்குள் இந்த பொருட்கள் கொண்டு செல்ல தடை..!
பட்ஜெட் தாக்கல்
logo
Kalki Online
kalkionline.com