திமுகவின் ரூ.1000 vs தவெகவின் ரூ.2500:மகளிர் உரிமை திட்டத்தில் இருக்கும் பிரதான வித்தியாசங்கள் என்ன?

திமுக ஆட்சியில் கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகைக்கும், தவெகவின் மகளிர் நிதியுதவி திட்டத்திற்கும் என்ன வித்தியாசம், பலன்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகைAI Image
Updated on

தமிழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம், அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குப் பேருதவியாக அமைந்ததுடன், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முக்கிய அம்சமாகவும் திகழ்ந்தது.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக தனது வாக்குறுதியில் உரிமைத் தொகையை ரூ. 1,500-ஆக உயர்த்தப்படும் என அறிவித்தது. அதேபோல் அதிமுக ரூ.2,000 என்றும், தவெக ரூ.2,500 வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தன.

இதற்கிடையே, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திராவிடக் கட்சிகளை வீழ்த்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

தன் முதல் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றி, கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த திமுக - அதிமுக இருபக்க ஆதிக்கத்தை உடைத்தெறிந்து மாற்று அரசியல் எழுச்சியைப் பதிவு செய்துள்ளது.

தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், உரிமைத் தொகை உடனடியாக ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களும் தலா ரூ. 1,000 மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உயர்வு அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமைத் தொகைக்கும், தவெகவின் மகளிர் நிதியுதவி திட்டத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் மற்றும் பலன்கள் குறித்துப் பார்ப்போம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (திமுக ஆட்சி):

கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ரூ. 1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

தற்போது சுமார் 1.31 கோடி பெண்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். (இதை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).

Mk Stalin, CM Vijay|மகளிர் உரிமைத் தொகை
Mk Stalin, CM Vijay|மகளிர் உரிமைத் தொகைimage credit-deccanchronicle.com, theweek.in

தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:

* 21 வயது நிரம்பிய பெண்கள் (செப்டம்பர் 15, 2002-க்கு முன்பு பிறந்தவர்கள்) விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

* குடும்பத் தலைவி, திருமணமாகாத தனிப் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகளின் குடும்பங்களுக்கும் இது பொருந்தும்.

* ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மக்கள் பிரதிநிதிகளுக்கு இத்தொகை கிடைக்காது.

* மேலும், கார், ஜீப், கனரக வாகனங்கள் வைத்துள்ளவர்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் ஜி.எஸ்.டி செலுத்துவோரும் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.

இதையும் படியுங்கள்:
மகளிர் உரிமைத் தொகை: புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுமா? தாசில்தார் கொடுத்த முக்கிய அப்டேட்.!
மகளிர் உரிமைத் தொகை

தவெக-வின் மகளிர் நிதியுதவி திட்டம்:

தேர்தல் வாக்குறுதியின்படி, தவெக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் அவர்கள் 60 வயதை எட்டும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ. 2,500 வரவு வைக்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார்.

தற்போதைய நிலையில், இந்த உதவித்தொகை எப்போது ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் எனவும், அப்போதுதான் யாருக்கெல்லாம் இத்தொகை கிடைக்கும் என்ற நிபந்தனைகள் குறித்த விவரமும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது? பட்ஜெட்டுக்கு முன்பே கைவிரித்த தவெக அரசு..!
மகளிர் உரிமைத் தொகை

திமுக ஆட்சியில் முதலில் "அனைத்து மகளிருக்கும் ரூ. 1,000" என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு நிபந்தனைகள் மூலம் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைப்போல, தவெக அரசும் அதே வழியைப் பின்பற்றி புதிய நிபந்தனைகளுடன் அறிவிப்பை வெளியிடுமா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com