மாணவர்களே உஷார்! நாடு முழுவதும் 32 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு - UGC அதிரடி நடவடிக்கை..!!

இந்தியாவில் உரிய அங்கீகாரம் இல்லாமல் 32 போலி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
UGC fake universities
UGC fake universitiesimage credit-rvcj.com
Published on

இந்தியாவில் உரிய அங்கீகாரம் இல்லாமல் 32 போலி கல்வி நிறுவனங்கள் கண்டறியப்பட்டதாக அதன் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டதோடு, அந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கொரோனா காலத்திற்கு பிறகு பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக பட்டங்களை வழங்குவதாக கூறி இணையதளங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டதை பல்கலைக்கழ மானியக்குழு (யு.ஜி.சி) கண்டறிந்தது.

இதனை தொடர்ந்து இதுபோன்ற போலி கல்வி நிறுவங்களை கண்டறிய சிறப்பு ஆய்வுக் குழுக்களை நாடு முழுவதும் யு.ஜி.சி நியமித்து சோதனை நடத்தியது. அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் பல மாநிலங்களில் ஒரே கட்டிடத்தில் பல போலி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் போலி கல்வி நிறுவங்களின் பட்டியலை https://www.ugc.gov.in/ யு.ஜி.சி தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது.

இதில் சில கல்வி நிறுவனங்கள் பிரபலமான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பெயரை சற்றே மாற்றி பயன்படுத்தியதும் அவ்வப்போது நடக்கிறது. அந்தவகையில் நடப்பாண்டில் உரிய அங்கீகாரம் இல்லாமல் 32 கல்வி நிறுவனங்கள் போலியாக செயல்பட்டதை யு.ஜி.சி. கண்டறிந்து, அந்த நிறுவனங்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை..!
UGC fake universities

அதன்படிய, அதிகபட்சமாக டெல்லியில் 12 கல்வி நிறுவனங்கள், உத்திரபிரதேசத்தில் 4 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்ரா, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளத்தில் தலா 2 கல்வி நிறுவனங்கள், அருணாசல பிரதேசம், அரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தானில் தலா 1 கல்வி நிறுனமும் போலியாக செயல்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

UGCயின் போலி பல்கலைக்கழகங்களின் முழு பட்டியல் இங்கே

டெல்லி:

1. வணிக பல்கலைக்கழக லிமிடெட், தர்யாகஞ்ச், டெல்லி

2. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், டெல்லி

3. தொழிற்கல்வி பல்கலைக்கழகம், டெல்லி

4. ADR-மைய நீதித்துறை பல்கலைக்கழகம், கோபாலா கோபுரம், ராஜேந்திர பிளேஸ், புது டெல்லி - 110008

5. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புது டெல்லி

6. விஸ்வகர்மா சுயதொழில் திறந்தவெளி பல்கலைக்கழகம், சஞ்சய் என்க்ளேவ், எதிரில். ஜிடிகே டிப்போ, புது தில்லி – 110033

7. ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம்), விஜய் விஹார், டெல்லி – 110085

8. அகில இந்திய பொது மற்றும் உடல் சுகாதார அறிவியல் நிறுவனம் (AIIPPHS), அலிப்பூர், டெல்லி – 110036

9. ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி பல்கலைக்கழகம் (WPUNU), பிதம்புரா, புது தில்லி – 110034

10. மேலாண்மை மற்றும் பொறியியல் நிறுவனம், கோட்லா முபாரக்பூர், டெல்லி

11. மவுண்டன் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், நேரு பிளேஸ், புது தில்லி – 110019

12. தேசிய மேலாண்மை தீர்வு நிறுவனம், ஜனக்புரி, புது தில்லி – 110058

உத்தரப் பிரதேசம்:

1. காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத், உ.பி

2. தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர், உ.பி.

3. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்தவெளி பல்கலைக்கழகம்), அலிகார், உ.பி.

4. பாரதிய ஷிக்ஷா பரிஷத், லக்னோ, உ.பி - 227 105

கேரளா

1. செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கேரளா

2. சர்வதேச இஸ்லாமிய தீர்க்கதரிசன மருத்துவப் பல்கலைக்கழகம் (IIUPM), குன்னமங்கலம், கோழிக்கோடு, கேரளா

மகாராஷ்டிரா:

1. ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர், மகாராஷ்டிரா

2. தேசிய பின்தங்கிய க்ருஷி வித்யாபீத், சோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிரா

மேற்கு வங்காளம்:

1. இந்திய மாற்று மருத்துவ நிறுவனம், கொல்கத்தா

2. மாற்று மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாகுர்பூர்கூர், கொல்கத்தா - 700063

கர்நாடகா

1. படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம், கோகாக், பெல்காம், கர்நாடகா

புதுச்சேரி :

1. ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன், திலாஸ்பேட்டை, புதுச்சேரி - 605009

- கண்டறியப்பட்ட இந்த 32 பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்தந்த மாநில அரசின் உயர்கல்வித்துறை, தலைமை செயலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகின் டாப் 10 பல்கலைக்கழகங்கள்!
UGC fake universities

மேலும், இதுபோன்ற பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் படித்து பட்டம் பெற்றால், அது உயர்கல்விக்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ பயன்படாது. எனவே மாணவர்கள் தங்களுடைய உயர் படிப்பை தேர்வு செய்வதற்கு முன்பு பல்கலைக்கழக மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் ‘லிஸ்ட் ஆப் ரெகக்னைஸ்டு யுனிவெர்சிட்டிஸ்’ என்ற பக்கத்தில் சென்று கல்வி நிறுவனங்களின் பட்டியலை சரிபார்த்து கொள்வது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com