ICICI-ல் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா? டிசம்பரில் 1 முதல் மாறும் கார்டு விதிகள்..!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது சேமிப்புக் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்கள் மற்றும் சலுகைகளில் டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
ICICI Bank|சினிமா சலுகை
ICICI Bank|சினிமா சலுகை
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்கள் மற்றும் சலுகைகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர உள்ளதாக தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய பரிவர்த்தனைக் கட்டணங்கள் வரும் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கிளைகளில் மேற்கொள்ளப்படும் ரொக்கப் பண பரிவர்த்தனைகள் மற்றும் போதிய பணமில்லாமல் தோல்வியடையும் இசிஎஸ் / நாக் மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கான அபராதக் கட்டணங்கள் இந்த மாற்றத்தின் கீழ் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், கிரெடிட் கார்டு கட்டணம் அதிகமாகுறது மட்டுமில்லாமல், இதுவரை கிடைச்சிட்டு இருந்த சில இலவச சலுகைகளையும் வங்கி நிறுத்தப்போகுது.

பிரைவேட் பேங்கிங் மற்றும் பிரீமியம் அக்கவுண்ட் வச்சிருக்கிறவங்களுக்கு மட்டும் சில நிபந்தனைகளோட அதிக சலுகை வரம்பு தொடரும்.

சேமிப்புக் கணக்கு மாற்றங்கள்:

* புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் வழக்கம்போல மாதத்திற்கு 3 முறை இலவசமாக ரொக்க வைப்பு மற்றும் வாபஸ் செய்துகொள்ளலாம். மேலும், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால், இந்த இலவச வரம்பைக் கடந்த பிறகு, ஒவ்வொரு ரூ.1,000 பரிவர்த்தனைக்கும் இதுவரை வசூலிக்கப்பட்ட ரூ.3.50 கட்டணம் இனி ரூ.4.00 ஆக உயர்த்தப்படும். பரிவர்த்தனை எண்ணிக்கை மற்றும் மதிப்பு ஆகிய இரண்டின் வரம்பையும் தாண்டினால், எது அதிகமோ அந்த புதியக் கட்டணம் வசூலிக்கப்படும்.

* வங்கி கணக்கில் போதிய இருப்புத் தொகை இல்லாத காரணத்தால் ஆட்டோமேட்டிக்கா பணம் பிடித்தம் ஆகுற இசிஎஸ் (ECS) பரிவர்த்தனை மற்றும் இதர தானியங்கி கட்டணப் பிடித்தங்கள் நிராகரிக்கப்பட்டால் வசூலிக்கப்படும் அபராதத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்பு ஒவ்வொரு தடவைக்கும் ரூ.500 வசூலித்த நிலையில், இனி ஒரே மாசத்தில், முதல் முறை தானியங்கிப் பற்று (auto-debit) தோல்வியடைந்தால் ரூ. 500-ம், 2-வது, 3-வது முறை பரிவர்த்தனை தோல்வியடைந்தால் அபராதத் தொகை ரூ.500-லிருந்து ரூ.550 ஆக உயர்த்தப்படும். ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 3 முறை வரை இந்த அபராதம் வசூலிக்கப்படலாம். இதுகூட வரியும் தனியா சேரும்.

கிரெடிட் கார்டு சலுகைகள் ரத்து & கட்டண உயர்வு:

* வங்கியானது கடன் அட்டை மாற்றுவதற்கான கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. கார்டு தொலைந்தாலோ சேதமானாலோ புதிய கார்டு வாங்க தற்போது ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.200 ஆக உள்ள நிலையில், டிசம்பர் 11 முதல் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும், எமரால்டு பிரைவேட் மெட்டல், 1838 ரிசர்வ், டைம்ஸ் பிளாக் கார்டுகளுக்கு இந்தக் கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்கம் வாங்க இது சரியான நேரம் இல்லை: ICICI-யின் முதலீட்டு நிபுணர் கூறும் எச்சரிக்கை..!!
ICICI Bank|சினிமா சலுகை

* வணிக மற்றும் கார்ப்பரேட் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு நவம்பர் 25 முதல் டைனமிக் கரன்சி கன்வெர்ஷன் (DCC) கட்டணம் கூடுகிறது. இப்போது 1 சதவீதமாக இருக்கும் இது 3.50 சதவீதமாக மாறும்.

* திரைப்படங்களை விரும்பும் கார்டுதாரர்களுக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கலாம். கோரல் (Coral), ரூபிஎக்ஸ் (Rubyx), எக்ஸ்பிரஷன்ஸ் (Expressions), சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), ஹெச்பிசிஎல் (HPCL Super Saver), Emirates Rubyx மற்றும் மேக்மைட்ரிப் (MakeMyTrip) கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக 'ஐநாக்ஸ்' தியேட்டர்களில் கிடைச்சிட்டு இருந்த இலவச சினிமா சலுகைகள் வரும் டிசம்பர் 15 முதல் நிறுத்தப்படுகிறது.

* அதேபோல் டிசம்பர் 15 முதல் சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த இலவச இன்சூரன்ஸ் வசதியையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ICICI
ஐசிஐசிஐ வங்கி

குறிப்பா, எமரால்டு பிரைவேட் மெட்டல் (Emeralde Private Metal), டைம்ஸ் பிளாக் (Times Black), எமரால்டு (Emeralde), எமரால்டு பிரைவேட் (Emeralde Private), டையமண்ட் (Diamant), சபீரோ (Sapphiro) மற்றும் ரூபிக்ஸ் (Rubyx) கார்டுகளில் இலவச டிக்கெட் வாங்கி வந்தவர்கள் இனி அதைப் பயன்படுத்த முடியாது.

* மேலும், எமரால்டு பிரைவேட் மெட்டல் , டைம்ஸ் பிளாக், எமரால்டு மற்றும் எமரால்டு பிரைவேட் அட்டைதாரர்களுக்குக் கிடைக்கும் 'எந்தக் காரணத்திற்காகவும் பயணத்தை ரத்து செய்தல்' (Cancellation For Any Reason - CFAR) காப்பீடும் டிசம்பர் 15 முதல் நிறுத்தப்படும். இந்த அம்சத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எந்தக் காரணத்தினாலும் பயணத்தை ரத்து செய்வதற்கான காப்பீட்டைப் பெறலாம்.

* பராக்ரம் (Parakram) மற்றும் பராக்ரம் செலக்ட் (Parakram Select) கிரெடிட் கார்டுகளில் வழங்கப்படும் இலவச தனிநபர் விபத்து மற்றும் விமான விபத்துக் காப்பீடு இனி கிடைக்காது.

இதையும் படியுங்கள்:
ICICI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்..! திடீரென 400% உயர்ந்த மினிமம் பேலன்ஸ் தொகை..!
ICICI Bank|சினிமா சலுகை

* ICICI வங்கியின் புதிய விதிகளின்படி, டிசம்பர் 11 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளின் 'பிரையாரிட்டி பாஸ்' (Priority Pass) மாற்றுவதற்கு புதிய கட்டணம் வரவுள்ளது. இதுவரைக்கும் இலவசமாக மாற்றப்பட்ட இந்த கார்டுக்கு, இனி ஒவ்வொரு முறையும் ரூ. 300 + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.

உங்களிடம் இந்த வகை கிரெடிட் கார்டுகள் இருந்து, பிரையாரிட்டி பாஸ் கார்டு சேதமடைந்திருந்தாலோ அல்லது மாற்ற வேண்டிய தேவை இருந்தாலோ, டிசம்பர் 11-க்கு முன்பாகவே விண்ணப்பித்து இலவசமாகப் பெற்றுக்கொள்வது சிறந்தது.

அதேபோல் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்த இலவச இன்சூரன்ஸ் சலுகை டிசம்பர் 15 முதல் நிற்பதால், தனியாக டிராவல் அல்லது விபத்து இன்சூரன்ஸ் தேவையா என்பதைத் திட்டமிடுங்கள்.

அடிக்கடி அதிக அளவு ரொக்கத்தை வைப்பு அல்லது எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 1 முதல் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும். இலவச மாதாந்திரப் பரிவர்த்தனைகளின் வரம்பிற்குள் தொடர்ந்து இருப்பவர்களை இந்தத் தற்போதைய திருத்தம் பாதிக்காது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! மினிமம் பேலன்ஸை அதிரடியாக குறைத்த ஐசிஐசிஐ வங்கி..!
ICICI Bank|சினிமா சலுகை

அதனால், ஐ.சி.ஐ.சி.ஐ வாடிக்கையாளர்கள் உங்க கார்டு மற்றும் அக்கவுண்ட் விவரங்களைச் சரியா செக் பண்ணிக்கிட்டு, தேவையில்லாத எக்ஸ்ட்ரா கட்டணங்களைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டுக்கோங்க.