அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் சாத்தியமானது எப்படி.?

சவால்களைக் கடந்து கையெழுத்தாகும் அமைதி ஒப்பந்தம் - ஒரு முழுமையான அலசல்.!
அமைதி ஒப்பந்தம்
US-Iran Ceasefire
Updated on

அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வருகின்ற ஜூன் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

அன்றைய தினமே எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஓமன் நாட்டு கடற்பகுதியில் ஈரான் கப்பல்களைத் தடுத்து வந்த அமெரிக்க கடற்படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் சில கண்ணி வெடிகளை வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே ஹார்மூஸ் ஜலசந்தியைத் திறக்க ஜூன் 19 தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் எண்ணெய் கப்பல்கள் உலக நாடுகளுக்கு சென்றடைய முடியாமல் போனது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தாறுமாறாக உயர்ந்தது.

இந்த போருக்கு முன்னதாக ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 65 முதல் 70 டாலராகவே இருந்தது. ஆனால் இந்த போர் தொடங்கியதற்கு பிறகு கச்சா எண்ணெய் உச்சபட்சமாக 120 டாலர் வரை உயர்ந்தது. இருப்பினும் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான கச்சா எண்ணெய் தற்போது 85 டாலருக்கு விற்பனையாகிறது.

இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சுமார் 4% வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக வெகு விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடும் வெகு விரைவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. கடந்த 107 நாட்களாக நீடித்து வந்த இந்தப் போர், முடிவுக்கு வர இருப்பதில் பாகிஸ்தான் மற்றும் கத்தாருக்கு அதிக பங்குண்டு. பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை கத்தார் அமைதிக் குழு ஈரானிலேயே இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தால், நான் மிகவும் பெருமையடைகிறேன் என டிரமப் தெரிவித்துள்ளார்.

End of America - Iran War
அமைதி ஒப்பந்தம்
இதையும் படியுங்கள்:
#JUST IN: காலையிலேயே ஷாக்..! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு.!
அமைதி ஒப்பந்தம்

இஸ்ரேல் லெபனானில் உள்ள இஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வந்தது. இந்தத் தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், போர் முடிவுக்கு வர வேண்டியது அவசியம் என டிரம்ப், இஸ்ரேலிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

இந்நிலையில் இஸ்ரேல் லெபனான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்ட பின்னரே, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டது.

முன்னதாக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் 20 லட்சம் டாலர் வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என ஈரான் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் தற்போது கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தத்தின்படி, எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை இலவசமாக கடக்கலாம்.

இதன் மூலம் உலக நாடுகளுக்கு பெருமளவு நிதிச்சுமை தவிர்க்கப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : இனி எந்த வைரஸ் வந்தாலும் பயமில்லை.! வந்தாச்சு AI தடுப்பூசி.!
அமைதி ஒப்பந்தம்
logo
Kalki Online
kalkionline.com