#JUST IN : வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு..!!

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்AI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அடைந்த படுதோல்வி, தமிழகத்தில் தவெக மாபெரும் வெற்றிபெற்று மிகப்பெரிய அலையாக உருவெடுத்தது, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கியது என அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதனால் பாஜகவை சரிவு பாதையில் இருந்து மீட்க அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து தேசிய அளவில் பாஜகவுக்கு தற்போது நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

அண்மையில் பாஜக தலைமை அறிவித்த மறுசீரமைப்பில், தேசிய அளவில் 13 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் மற்றும் 16 செயலாளர்கள் கொண்ட பலமான அணி களமிறக்கப்பட்டது. ஸ்மிருதி இரானி, பிப்லப் குமார் தேப் ஆகியோர் மீண்டும் தேசியப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். வசுந்தரா ராஜே, ராம் மாதவ் உள்ளிட்ட தலைவர்கள் தேசிய துணைத் தலைவர்களாகப் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவரான நிதின் நபின் இன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்களையும், இணை பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாஜகவின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன், ஆந்திர மாநில பாஜகவின் இணை பொறுப்பாளராக (Co-Incharge) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்துக்கு ராம் மாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு இரண்டு இணை பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இணை பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுரானா மற்றும் டி.கே.அருணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராம் மாதவ்
ராம் மாதவ்image credit-bbc.com

ஆந்திர மாநில பொறுப்பாளராக அரவிந்த படோரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரியானா மற்றும் சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளராக ஸ்மிருதி இரானியும், சத்தீஸ்கர் மாநில இணை பொறுப்பாளராக சித்தார்த் ஷம்புவும் நியமிக்கப்பட்டனர்.

கேரள மாநில பொறுப்பாளராக நாகராஜாவும், இணை பொறுப்பாளராக எம்.வெங்கடேசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமல்லாமல் தேசிய அளவில் மொத்தமாக 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கான பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவின் தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் திடீரென விடுவிக்கப்பட்டார். இதன்பின் நயினார் நாகேந்திரனுடன் சில முறை வானதி சீனிவாசன் டெல்லி சென்று தலைமையை சந்தித்து வந்தார்.

இதையும் படியுங்கள்:
‘பாஜகவுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை’ வானதி சீனிவாசன் அறிக்கை!
வானதி சீனிவாசன்

தமிழக பாஜகவின் தலைமைப் பொறுப்பில் மாற்றம் வரலாம் என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்ததால், அவர் தமிழக அளவில் முக்கியப் பொறுப்பைப் பெறுவார் என்று அவரது ஆதரவாளர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், தற்போது அவருக்கு அண்டை மாநிலமான ஆந்திராவின் இணை பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆந்திர மாநிலத்தின் இணை பொறுப்பாளராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டிருப்பது பாஜக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
உடல் நலம் குறித்து வானதி சீனிவாசன் உருக்கமான வீடியோ..!
வானதி சீனிவாசன்

இந்த புதிய நியமனத்தை அடுத்து, கட்சியின் தேசியத் தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அனைத்து மாநிலப் பொறுப்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com