தவெக தான் அடுத்த அதிமுக-வா.? அப்போ புரியல.. இப்போ புரியுது!

TVK vs ADMK
ADMK
Updated on

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக நேற்று மூன்று எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்நிலையில் இன்றும் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்பட 4 எம்எல்ஏ-க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே அதிமுகவின் பலம் 44 ஆக குறைந்த நிலையில், அது 40-ஆக குறையக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இதனைத் தடுக்க சென்னையில் உள்ள அதிமுக நிர்வாகி ஒருவரின் வீட்டில் இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் அதிமுகவில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும் என்று அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக பிளவு பட்டதற்கு முன்பாக நிர்வாகிகளிடம் இருந்த அனைத்து பொறுப்புகளும் திரும்ப வரவேண்டும் என எஸ்.பி.வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிகாட்டு குழுவை அமைக்க வேலுமணி தரப்பினர் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய மூவரும் நேற்று தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில்இணைந்தனர்.

இந்நிலையில் இன்றும் கூட 4 எம்எல்ஏக்கள் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களை ஒன்றிணைக்கவும், நிர்வாகிகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை சரி செய்யவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அதிமுகவில் இருக்கும் பிரச்சினைகள் சரி செய்யப்படும் என தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பாக தவெக தான் அடுத்த அதிமுக என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அது போலவே சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது தவெக. தற்போது திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் தவெக, வெகு விரைவிலேயே தனிப் பெரும்பான்மையுடன் தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பட்டதாரிகளுக்கு பம்பர் ஆஃபர்: மத்திய அரசில் 12,256 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?
TVK vs ADMK

தற்போது வரை 4 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் தவெக வென்றால், சட்டமன்றத்தில் அவர்களின் பலம் மேலும் உயரும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவால் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. கணிசமான வாக்குகளை பெற்றிருந்தாலும் கூட வெற்றி என்பது அவர்களுக்கு தற்போது வரை எட்டாக் கனியாகவே உள்ளது.

ணஇந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகி செங்கோட்டையன், அடுத்த அதிமுக-வே தவெக தான் எனத் தெரிவித்திருந்தார். அவர் சொன்னது அப்போது புரியவில்லை என்றாலும், இப்போது நன்றாக புரிகிறது என்றே தவெக மற்றும் அதிமுக-வின் தற்போதைய நிலைமை இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
டாக்டர் ஆக ஆசையா.? நுழைவுத்தேர்வு இல்லை! – இந்த மருத்துவப் படிப்புக்கு உடனே விண்ணப்பீங்க.!
TVK vs ADMK
logo
Kalki Online
kalkionline.com