#BIG NEWS : "ஜனநாயகன்" திரைப்படத்தை மறு ஆய்வு செய்யும் பணியை ஒத்தி வைத்தது தணிக்கைக் குழு..!

Jana Nayagan Movie
Jana Nayagan Movie
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

விஜயின் "ஜனநாயகன்" திரைப்படத்தை மறு ஆய்வு செய்யும் பணியை ஒத்தி வைத்தது தணிக்கைக் குழு.

தணிக்கை குழுவில் இருக்கும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் இன்று நடைபெற இருந்த ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வு செய்யும் பணி மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தணிக்கைக் குழு ஜனநாயகன் திரைப்படத்தை இன்று மறு ஆய்வு செய்ய இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் அலக்கழிக்கப்பட்டு வருகிறது. 

நடிகர் விஜயின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அதாவது ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் மறு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக கிடைக்காததால் ஜனநாயகன்பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. படத்திற்கு சென்சார் சான்று கோரி ரிவைஸிங் கமிட்டியிடம் அனுப்பியது. அதன்படி ரிவைஸிங் கமிட்டி இன்று படத்தை பார்ப்பதாகவும் அறிவித்திருந்தது. ஆனால் பின்னர் திடீர் என்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் மீண்டும் தொடர்கிறது. பிற்பகல் 2 மணிக்கு பார்க்கத் திட்டமிட்டு மறு ஆய்வு செய்வதாக இருந்த படம் தற்பொழுது வருகிற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏப்ரல் 1 முதல் புதிய கிரெடிட் கார்டு விதிகள்: 10 லட்சத்திற்கு மேல் செலவு செய்தால் ஐடி நோட்டீஸ்?
Jana Nayagan Movie
logo
Kalki Online
kalkionline.com