

தமிழக அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 876-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் (Village Panchayat Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கான கால அட்டவனையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்:
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத் தொடக்கம்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 4-ம்தேதி முதல் இணையவழியில் (Online) தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 18, 2026 (அன்றைய தினம் பிற்பகல் 11.59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும்)
நேர்காணல் நடைபெறும் நாள்: ஜனவரி மாதம் 19-ம்தேதி முதல் 21-ம்தேதி வரை
பணி நியமன ஆணை: ஜனவரி 27, 2027
ஊதியம்: ஊதிய நிலை 2-ன் கீழ் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு கிடையாது; நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இது தற்காலிகப் பணியோ ஒப்பந்தப் பணியோ அல்ல, நிரந்தர அரசுப் பணியாகும்.
இருப்பிடத் தகுதி (முக்கியம்): விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீக்கப்பட்டு தகுதியான விண்ணப்பத்தாரர்கள் பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த பணிகள் அடுத்த மாதம் 23, 24, 28, 29 மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறும். இதைத்தொடர்ந்து நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் ஜனவரி மாதம் 5-ம்தேதி அனுப்பப்படும்.
நேர்காணல் ஜனவரி மாதம் 19-ம்தேதி முதல் 21-ம்தேதி வரை நடைபெறும். நேர்காணல் முடிந்த பிறகு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் ஜனவரி 25-ம்தேதி வெளியிடப்படும்.
விண்ணப்ப கட்டணம் :
இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினர் (General), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.50/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஜனவரி 27-ம்தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும்.
வயது வரம்பு:
பொதுவாக விண்ணப்பத்தாரருக்கு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்ட. அதன்படி, பொதுப்பிரிவினருக்கு (OC) 18 முதல் 35 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC / BCM / MBC / DNC) 37 வயது வரையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு (SC / SCA / ST) 40 வயது வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கூடுதல் வயதுச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதிகள் மற்றும் விவரங்கள் :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
பணியில் சேர்ந்த பின் ஒரு மாதப் பயிற்சியும், தகுதிகான பருவத்தில் பஞ்சாயத்து சட்டம், விதிகள் மற்றும் இந்திய அரசியலமைப்பு தொடர்பான துறைத் தேர்வுகளும் நடத்தப்படும்.
தேர்வாகும் நபர்கள் அந்தந்த கிராம ஊராட்சியிலேயே வசிக்க வேண்டும் என்பதால், சொந்த ஊர் அல்லது அருகிலுள்ள கிராமத்திலேயே பணி கிடைக்க வாய்ப்புள்ளது.
விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு மற்றும் காலிப்பணியிட விவரங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பத்தாரர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் அறிவிப்பை பார்த்து விண்ணபிக்கலாம்.
பின்பற்ற வேண்டிய முக்கிய நிபந்தனைகள் :
தகுதியும், விருப்பமும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தங்களது கல்வித்தகுதிச் சான்று, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமைச் சான்று (Priority Certificate) ஆகியவற்றிற்கான உரிய ஆதாரங்களைக் கண்டிப்பாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அரசால் நிர்ணயிக்கப்பட்ட இனசுழற்சி, வயது வரம்பு மற்றும் உரிய கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.