60 ஆண்டு கால சகாப்தத்திற்கு மூடுவிழா! சென்னையில் மூடப்பட்டது Viveks..!!

வீட்டு உபயோகப் பொருட்களின் புகழ்பெற்ற சில்லறை விற்பனையாளரான விவேக்ஸ், தனது கடைகளை மூடுகிறது.
Viveks
Viveksimage credit-newindianexpress.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

புகழ்பெற்ற மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள் விற்பனை நிறுவனமான விவேக்ஸ்' ரீடைல் நிறுவனம், தனது அனைத்துக் கடைகளையும் மற்றும் ஈகாமர்ஸ் (E-commerce) வர்த்தகத்தையும் முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நடுத்தர குடும்ப கனவுகளையும், வீட்டு உபயோக பொருட்களையும் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்த்தி செய்து வந்த பிரபல 'விவேக்ஸ்' (Viveks) ரீடைல் நிறுவனம், அனைத்து சில்லறை மற்றும் ஆன்லைன் (E-commerce) விற்பனை நிலையங்களையும் முழுமையாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் குடும்பங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த இந்த பாரம்பரிய நிறுவனம் தனது செயல்பாடுகளை முடக்கியுள்ளது வர்த்தக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'விவேக்ஸ்' அந்த அறிவிப்பு 80 மற்றும் 90-களில் வாழ்ந்த சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலத்திற்கேற்ப மாறிவரும் ஆன்லைன் வணிகப் போட்டிகள் மற்றும் பொருளாதார மாற்றங்களால் நஷ்டத்தை சந்தித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே வர்த்தகத்தை மூடுவதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

1965 முதல் துணை நின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள 'விவேக்ஸ்' நிர்வாகம், அனைத்து ஊழியர்களுக்கும் முழுச் சம்பளம் வழங்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் அனைத்து ஆர்டர்களும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக உறுதி அளித்துள்ளது.

1965-ம் ஆண்டு மே மாதம் மயிலாப்பூரில் பி.ஏ.லட்சுமி நாராயண செட்டி என்பவரால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் அந்த காலத்தில் தமிழகம் முழுவதும் வீடுகளுக்கு தேவையான குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி போன்ற பல்வேறு பொருள்களை எளிதில் வாங்கும் நம்பகமான இடமாக திகழ்ந்த நிலையில், தற்போது வர்த்தக போட்டியை சமாளிக்க முடியாமல் பின்தங்கியுள்ளது.

நடுத்தரக் குடும்பங்களின் எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோகப் பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்நிறுவனம் ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது.

விவேக்ஸ் நிறுவனம்
விவேக்ஸ் நிறுவனம்image credit-tamil.newsbytesapp.com

விவேக்ஸ் அனைத்து சர்வதேச பிராண்டுகளையும் விற்பனை செய்தது. பல தலைமுறை நடுத்தரக் குடும்பங்களுக்கு, விவேக்ஸ் என்பது வெறும் பொருட்கள் விற்கும் கடையாக மட்டும் இருக்கவில்லை; அது ஓர் உணர்வாக இருந்தது. மேலும், ஆன்லைன் வர்த்தகம் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மக்கள் பொருட்களை வாங்க விவேக்ஸ் விற்பனை நிலையங்களுக்குப் படையெடுத்தனர்.

படிப்படியாக விரிவடைந்த விவேக்ஸ் தனது ஷோரூம்களை 1969-ல் புரசைவாக்கத்திலும், 1980-ல் திநகரிலும் தொடங்கியது.

குறிப்பாக தி.நகர் கிளை வெளிநாட்டு பிராண்ட் பொருட்களை விற்பனை செய்து, பணக்காரர்கள் முதல் மிடில் கிளாஸ் மக்கள் வரை அனைவரது விருப்பமான ஷாப்பிங் தளமாக மாறியது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : ஏப்ரல் 1 முதல் 'E20 பெட்ரோல்' மட்டுமே விற்பனை: ஒன்றிய அரசு அதிரடி!
Viveks

ஜனவரி 1-ம் தேதி தொடங்கும் புத்தாண்டு தள்ளுபடி விற்பனை (New Year Sale) முறையைச் சென்னையில் அறிமுகப்படுத்தியது விவேக்ஸ்தான். பண்டிகைக் காலங்களில் விவேக்ஸ் அறிவிக்கும் லுகையில் பொருட்கள் வாங்க, மக்கள் திநகர் கடைக்கு வெளியே இரவு முழுவதும் விடியவிடிய காத்திருந்த காலமும் உண்டு.

முதன் முதலில் வெறும் 1 ரூபாய் மட்டும் செலுத்தி பொருளை வாங்கிச் சென்று, மீதி தொகையை மாதத் தவணையில் செலுத்தும் முறையை அந்த காலத்திலேயே அறிமுகம் செய்ததும் விவேக்ஸ் நிறுவனம் தான்.

இதற்காக 1991-இல் 'விவேக் ஹையர் பர்சேஸ் அண்ட் லீசிங் கம்பெனி லிமிடெட்' என்ற NBFC நிறுவனத்தைத் தொடங்கி, பின்னாளில் அதை அமெரிக்காவின் AIG குரூப்பிற்கு விற்றனர்.

எனினும் இது நிரந்தர மூடல் அல்ல, தற்காலிகமான இடைவெளி மட்டுமே என்று தெரிவித்துள்ள குடும்ப வட்டாரங்கள், விரைவில் விவேக்ஸ் மீண்டும் பழையபடி, புதிய பொலிவுடன் களமிறங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
நீங்களுமா..? போலி லேபிள் ஒட்டி காலாவதியான பொருட்கள் விற்பனை: அமேசான், இன்ஸ்டா கிடங்குகளுக்கு சீல்!
Viveks

1960-களில் தவணை முறை விற்பனை (Hire purchase) மற்றும் புத்தாண்டு விற்பனை போன்றவற்றை முதன்முதலில் அறிமுகப்படுத்திய இந்நிறுவனம் மூடப்படுவது பழைய நினைவுகளைச் சுமந்த சென்னை வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com