அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்: தவெக-விற்கு செக் வைத்த காங்கிரஸ்.!

எங்கள் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்: காங்கிரஸ் அமைச்சர்.!
Rahul Gandhi - Vijay
Congress Minister
Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு, முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவளித்தது. இதற்காக தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர் பொறுப்புகளை வழங்கியது தவெக. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தற்போது தவெக கூட்டணியில் இணைந்துள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்ட சபை அமைச்சரவையில் இடம் பிடித்தது காங்கிரஸ்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரதமர் வேட்பாளராக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பெயரை தவெக-வைச் சேர்ந்த பலரும் கூறி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சரும் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : விஜய் போட்டியே இல்லாத பிரதமர் ஆவார் - ஜோதிடர் ராதன் பண்டிட் அதிரடி கணிப்பு..!
Rahul Gandhi - Vijay

வருகின்ற 2029 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் வேட்பாளருக்கான பட்டியலில் விஜய்க்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்ன. இந்நிலையில் அடுத்த பிரதமர் வேட்பாளர் விஜய் தான் என தவெக-வினர் பலரும் கூறி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸை சேர்ந்த சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் சட்டசபையில் இன்று பேசினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “2029 நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்தி தான். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் இதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக அமைச்சரவையில் இருந்து இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட், விஜய் போட்டியே இல்லாத பிரதமர் இன்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதோடு கருத்துக் கணிப்பு முடிவுகளும் முதல்வர் விஜய்க்கு சாதகமாக வந்துள்ளன. இதனால் தான் தவெக நிர்வாகிகள் பலரும் அடுத்த பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் தான் என போஸ்டர் அடித்து வருகின்றனர். இருப்பினும் காங்கிரஸ் தலைவரும், தவெக தலைவரும் இது குறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RAHUL GANDHI - VIJAY
RAHUL GANDHI - VIJAY image : deccan chronicle
இதையும் படியுங்கள்:
சம்பளம் வாங்குவோர் குஷி.!! ரூ.1,080 சரிந்த தங்கம் விலை.!
Rahul Gandhi - Vijay

காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளை துறந்தால் தவெக-விற்கு வழங்கி வரும் ஆதரவும் கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. இது நடந்தால் தவெ ஆட்சி கவிழவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே தவெக-வின் ஆட்சி ஐந்து ஆண்டுகள் வரை நிலைக்காது என திராவிட கட்சிகள் மாறி மாறி கூறி வரும் சூழலில், காங்கிரஸின் இந்த எச்சரிக்கை தவெக-விற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தலைமைச் செயலர் விவகாரத்தில் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தவெகவுக்கும் இடையே வார்த்த்தை மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் வேட்பாளர் என்ற கோஷத்தின் மூலம் காங்கிரஸ் உடனும் லேசாக மோதல் போக்கு தொடங்கியுள்ளது. இதனை விரைந்து முடிப்பது தான் முதல்வர் விஜய்க்கும், தவெக கட்சிக்கும் நல்லது.

இல்லையெனில் இது பல புது பிரச்சினைளை உருவாக்கி விடும். ஆகையால் பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க தவெக தலைமை விரைந்து முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலைப் போல் நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக பெரும்பான்மையான வெற்றியைப் பெறும் பலரும் கணித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com