இது தெரியுமா..? இனி வங்கி கணக்கு இல்லாமலும் பணம் அனுப்பலாம்..!

கூகுள் பே அறிமுகப்படுத்தி உள்ள ‘UPI Circle’ வசதி மூலம் வங்கி கணக்கு இல்லாதவர்களும் இனி டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடியும்.
G pay
G pay
Published on

கூகுள் பே, யுபிஐ சர்க்கிளில்(UPI CIRCLE) 'பாக்கெட் மணி' (Pocket money)என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் செலுத்த உதவ முடியும். அதாவது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து, உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது பெரியவர்கள் பணம் செலவு செய்ய நீங்கள் தரும் ஒரு டிஜிட்டல் அனுமதியாகும். இதன் மிகப்பெரிய சிறப்பம்சமே இதன் கட்டுப்பாடு முழுவதும் பெற்றோர்கள் கையில் இருப்பதுதான்.

யுபிஐ சர்க்கிள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கிய கூகுள், இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர் 'பிரைமரி' பயனராக இருந்து(primary payer) அனுமதி அளிக்கும் பட்சத்தில் மற்றொரு நபர் 'செகண்டரி' பயனர்களுக்கு (Secondary payer) குறிப்பிட்ட வரம்பிற்குள் அந்த பணத்தை செலவிடலாம்.

இந்த வசதியில் பணம் செலவழிப்பதற்கான கட்டுப்பாடும் அனுமதியும் முழுமையாக முதன்மை பயனரிடமே இருக்கும்.இது பாக்கெட் மணி (Pocket Money) வழங்க சிறந்தது.

இதையும் படியுங்கள்:
Google Pay, Paytm பயன்படுத்துபவரா நீங்கள் ? இன்று முதல் வரும் முக்கிய மாற்றம்..!
G pay

13-18 வயதுக்குட்பட்டவர்கள் உட்பட, வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய உதவலாம். பெற்றோர்கள் தங்களது கூகுள் பே செயலி மூலமாகவே, தங்கள் பிள்ளைகளுக்கென ஒரு பிரத்யேக கணக்கை உருவாக்க முடியும்.மேலும் இதற்காக சிறுவர்களுக்கு தனியாக வங்கி கணக்கு எதுவும் தேவையில்லை.

கையில் பணமாக கொடுக்கும்போது, பிள்ளைகள் அதை எதற்கு செலவு செய்தார்கள் என்பது பல நேரங்களில் பெற்றோருக்குத் தெரியாது. இதன் மூலம் குழந்தைகள் செய்யும் செலவுகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.

செகண்டரி பயனர்களுக்கு மாதத்திற்கு ₹15,000 வரை வரம்பு அமைக்கலாம். பாதுகாப்பிற்காக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்கள் அனுமதியைப் பெறும்படி (Partial Delegation) அமைத்து கொள்ளலாம்.

Gpay-ல் பாக்கெட் மணி அம்சத்தை அமைப்பது எப்படி?

Google Pay செயலியைத் திறந்து ‘UPI Circle’ அல்லது ‘Pocket Money’ ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களுக்கு நம்பிக்கையானவர்களின் போன் நம்பரைச் சேர்த்து, அதாவது இரண்டாம் நிலை பயனரின் பெயர் அல்லது தொலைபேசி எண்ணைத் தேடித் தேர்ந்தெடுக்கவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்பின் UPI Circle QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஒப்புதல் அமைப்புகளை அமைக்கவும்.

நீங்கள், "ஒவ்வொரு கட்டணத்தையும் அங்கீகரிக்கவும்" அல்லது "மாதாந்திர வரம்பை அமைக்கவும்:" என்பதில் எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கலாம்.

விருப்பம் 1-ஐத் தேர்ந்தெடுத்தால், விரும்பிய மாதாந்திர வரம்பை அமைக்கவும்.

இரண்டாம் நிலை பயனருக்கான உறவுமுறை, அரசாங்க அடையாள எண் போன்ற கூடுதல் விவரங்களைச் சேர்க்கவும்.

அவர்களுக்கான உங்கள் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வரம்பு (Limit) அமைத்து, பின்னர் அழை (invite) என்பதைக் கிளிக் செய்யவும்.

அழைப்பை அனுப்ப, உங்கள் UPI PIN எண்ணை உள்ளிட வேண்டும்.

அவர்கள் தங்களுடைய போனில் அதை ஏற்றுக் கொண்டதும், அவர்கள் உங்கள் கணக்கைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
Google pay - தவறா பணம் அனுப்பிட்டீங்களா? திரும்ப கிடைக்க வழி இருக்கே...
G pay

நீங்களே நிர்வகிப்பவர் (Primary user) என்பதால், நீங்கள் அனுமதி அளித்தால் மட்டுமே, செகண்டரி பயனர்கள் உங்கள் வங்கியிலிருந்து நேரடியாக பணம் அனுப்ப முடியும். இது ஒரு 'டிஜிட்டல் பர்ஸ்' போன்று செயல்படுவதால், நம்பகமான நபர்களுக்கு மட்டுமே இந்த அனுமதியை வழங்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com