

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குப்பை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு தொடர்பான புகார்களை வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தெரிவிக்கும் புதிய குறைதீர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற பணிகள் குறித்த புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அடிப்படை பிரச்சினைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எழுத்து மூலமாகவோ, செல்போன் வழியாகவோ தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
அதன்படி இதுபோன்ற புகார்களைப் பொதுமக்கள் புகைப்படங்களுடன் வாட்ஸ்அப்பில் அனுப்பலாம். புகார் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கவும், உடனடி தீர்வு காணவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குப்பை தேக்கம், குடிநீர் விநியோகப் பிரச்சினை மற்றும் பழுதான தெருவிளக்குகள் குறித்த புகார்களை எளிதாகத் தெரிவிக்கவும், அவற்றுக்கு விரைவாகத் தீர்வு காணவும் இந்தத் திட்டம் உதவுகிறது.
வாட்ஸ்அப் மற்றும் AI அடிப்படையிலான சாட்பாட் (Chatbot) வழியாகப் புகார்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இதற்கான ஒப்பந்தப்புள்ளி நகராட்சி நிர்வாகம் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறை தீர்ப்பு அமைப்பை வடிவமைத்தல், மேம்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் பணி இதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
அடிப்படை பிரச்சினைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எழுத்து மூலமாகவோ, செல்போன் வழியாகவோ தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
வாட்ஸ்அப் மூலம் தங்கள் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவித்தால் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும். அந்த அடிப்படையில் தான் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அந்த வகையில், பொதுமக்கள் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற பணிகள் குறித்த புகார்களுக்கு 7598129900 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகாரை தெரிவிக்கலாம்.
இதனால் மக்களுக்கு என்ன பயன்? இதான் முக்கியம்!
* இதுவரை மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று புகார் கொடுக்க வேண்டும். இனி இனி அலைய வேண்டாம், உங்கள் வாட்ஸ்அப்-லேயே புகார் சொல்லலாம்.
* குப்பை அள்ளவில்லை, குடிநீர் வரவில்லை / குழாய் உடைப்பு, தெருவிளக்கு எரியவில்லை, பாதாள சாக்கடை அடைப்பு, சாலை குண்டும் குழியுமாக உள்ளது, சொத்து வரி, பிறப்பு இறப்பு சான்றிதழ் தொடர்பான குறைகள் போன்ற அனைத்து புகார்களையும் வாட்ஸ்அப்-ல் போட்டோ, வீடியோவுடன் அனுப்பலாம்.
* நீங்கள் அனுப்பிய புகாரை AI (செயற்கை நுண்ணறிவு) தானாக படித்து, அது எந்த ஊர், எந்த வார்டு, என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உடனே அனுப்பும்.
* புகார் என்ன ஆனது என்று நீங்கள் வாட்ஸ்அப்-லேயே Track பண்ணலாம். அதிகாரிகள் வேலை செய்யாவிட்டால், மேல் அதிகாரிக்கு தானாக போகும்.
* இந்த திட்டத்தை ஏற்கனவே TNeGA (தமிழ்நாடு மின் ஆளுமை முகமை) மூலம் வழங்கப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி முடித்த அனுபவம் கொண்ட, ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆக மொத்தம், தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற மக்களுக்கு, இனி உங்கள் கையில் உள்ள செல்போனிலேயே, வாட்ஸ்அப் மூலமே அரசு சேவை கிடைக்க போகிறது.