வாட்ஸ்அப்ல புதிய அம்சம்: டீனேஜ் பசங்க சீக்ரெட்ஸ் இனி பெற்றோர்கள் கையில்?

வாட்ஸ்அப் தனது செயலியில் டீனேஜ் (13-17 வயது) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகப் புதிய 'பேரண்டல் கண்ட்ரோல்' (Parental Controls) வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Parental Controls
Parental ControlsAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

வாட்ஸ்அப் (WhatsApp) தனது செயலியில் டீனேஜ் (13-17 வயது) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகப் புதிய 'வாட்ஸ்அப் பேரண்டல் கண்ட்ரோல்' (Parental Controls) வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாட்ஸ்அப் கணக்கின் தனியுரிமை அமைப்புகளைக் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும்.

குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாக அறிமுகமான வாட்ஸ் அப், தற்போது உலகின் மிகவும் பிரபலமான தகவல் தொடர்பு தளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத செயலியாக மாறியுள்ள வாட்ஸ் அப்பை இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி, புகைப்படம், காணொளி, ஒலிப்பதிவு மற்றும் குரல், காணொளி அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குவதால் இந்த தளம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாடுகள் என பல்வேறு துறைகளில் தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய தளமாக வாட்ஸ் அப் திகழ்கிறது. தனிநபர் உரையாடல்கள் மட்டுமின்றி, குழு உரையாடல்களுக்கும் இந்த செயலி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ் அப், தகவல் தொடர்பை மேலும் எளிமையாக்கும் நோக்கில் பல்வேறு மேம்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், வாட்ஸ்அப் (WhatsApp) தனது செயலியில் டீனேஜ் (13-17 வயது) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகப் புதிய 'பேரண்டல் கண்ட்ரோல்' (Parental Controls) வசதிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் தங்களது டீனேஜ் பிள்ளைகளின் கணக்குகளைக் கண்காணிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய பேரண்டல் கண்ட்ரோலின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* டீனேஜ் பிள்ளைகள் எந்தெந்த குரூப்களில் (Group Alerts) இணைகிறார்கள் அல்லது வெளியேறுகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்கலாம். புதிய குரூப்பில் இணையும் போது பெற்றோருக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும்.

* பிள்ளைகளின் ப்ரொபைல் படம் (Profile Picture), ஸ்டேட்டஸ் (Status updates) மற்றும் ஆன்லைன் விவரங்களை, அதாவது தனியுரிமை அமைப்புகளை (Privacy Settings) யார் பார்க்கலாம் என்பதைப் பெற்றோர்கள் தீர்மானிக்கலாம்.

* பிள்ளைகளை யார் குரூப்பில் சேர்க்கலாம் (யாரும் சேர்க்கலாமா அல்லது காண்டாக்ட்ஸில் உள்ளவர்கள் மட்டுமா) என்பதை பெற்றோர்கள் கட்டுப்படுத்தலாம்.

* வாட்ஸ்அப் சேனல்களில் (Channels Control) பிள்ளைகள் எதையெல்லாம் பார்க்கலாம், எவற்றைப் பின்தொடரலாம் என்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.

வாட்ஸ்அப் பேரண்டல்
வாட்ஸ்அப் பேரண்டல்AI image

* பிள்ளைகள் Meta AI உடன் உரையாடுவதைக் கட்டுப்படுத்த 'Standard 13+' அல்லது மிகவும் பாதுகாப்பான 'Limited Content' ஆகிய ஆப்ஷன்களைப் பெற்றோர்கள் தேர்வு செய்யலாம்.

* பெற்றோர்கள் அமைக்கும் ஒரு ரகசிய PIN நம்பர் மூலமே இந்த அமைப்புகளை மாற்றியமைக்க முடியும் என்பதால், பிள்ளைகளால் தன்னிச்சையாக இதை மாற்ற முடியாது. அதாவது, இந்த அமைப்புகள் அனைத்தும் பெற்றோர்களால் உருவாக்கப்படும் ரகசியப் பாதுகாப்பு எண்ணால் (Parental PIN) பூட்டப்பட்டிருக்கும். பிள்ளைகள் இந்த அமைப்புகளை மாற்ற முயன்றால் பெற்றோரின் அனுமதி தேவைப்படும்.

இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பிள்ளைகளின் தனிப்பட்ட சாட்கள் (Chats) மற்றும் அழைப்புகள் (Calls) எப்போதும் போல 'எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்' (End-to-end encrypted) செய்யப்பட்டு பாதுகாப்பாக இருக்கும். அதாவது, பெற்றோராலோ அல்லது வாட்ஸ்அப் நிறுவனத்தாலோ பிள்ளைகளின் மெசேஜ்களைப் பார்க்கவோ , படிக்கவோ, கேட்கவோ முடியாது.

இந்த பேரண்டல் கண்ட்ரோல் அம்சம் கட்டாயமானது அல்ல. இது ஒரு விருப்பத்தேர்வு (Optional) அம்சமாகும். பெற்றோரும் பிள்ளையும் பரஸ்பரம் சம்மதித்தால் மட்டுமே கணக்குகளை இணைக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.! இனி வாட்ஸ்அப்பிலேயே போலீசுக்கு புகார் அளிக்கலாம்.! புதிய வாட்ஸ்அப் காப் சேவை தொடக்கம்!
Parental Controls

குறிப்பு: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக ஏற்கனவே கடந்த மார்ச் 2026-ல் 'Parent-managed accounts' என்ற தனி அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை எவ்வாறு செட் செய்வது? (How to Set Up)

இந்த வசதியைப் பயன்படுத்த இருவரது போன்களிலும் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன் இருக்க வேண்டும்.

பிள்ளையின் போனில் உள்ள வாட்ஸ்அப் செயலியில் Settings -> Parental controls பகுதிக்குச் சென்று, பிள்ளையின் பிறந்த தேதியை (Birthdate) உள்ளிட்டு, திரையில் தோன்றும் QR கோடை (QR code), பெற்றோரின் போன் மூலம் ஸ்கேன் செய்து பெற்றோரின் வாட்ஸ்அப் கணக்குடன் (Link Account) அதை இணைக்க வேண்டும். இறுதியாக உங்கள் பிள்ளையின் வாட்ஸ்அப் கணக்கில் இந்த Parental controls ஆப்ஷன் காட்டுகிறதா எனச் சரிபார்க்கவும்.

இதையும் படியுங்கள்:
பைக் சாகசத்திற்கு ‘எண்ட் கார்டு’... ஒரே ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்; சென்னை போலீஸின் புதிய அஸ்திரம்!
Parental Controls

இந்த அம்சம் தற்போது உலகளவில் படிப்படியாக (Gradually) பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உங்கள் கணக்கில் இதைப் பயன்படுத்த வாட்ஸ்அப் செயலியைப் புதிய பதிப்பிற்கு (Latest Version) அப்டேட் செய்து கொள்ளவும்.

logo
Kalki Online
kalkionline.com