

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறை மீறல்கள் மற்றும் நிர்வாகக் கோளாறுகள் காரணமாக, Paytm Payments Bank-ன் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
நொய்டாவை தலையிடமாக கொண்டு செயல்படும் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி(Paytm Payments Bank) கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக அந்த ஆண்டு ரிசர்வ் வங்கியிடம் இருந்து உரிமம் பெற்று இருந்தது.
பேடிஎம் நிறுவனம் டிஜிட்டல் மோடில் வங்கியாக இயங்கி வந்தது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேடிஎம் பேமென்ட் வங்கி பெற்ற லைசன்ஸின்படி, இந்த வங்கியால் சிறு சிறு டெபாசிட்டுகளைப் பெற முடியும். ஆனால், கடன் எல்லாம் வழங்க முடியாது. ஆனால், வழக்கமான வங்கிகளைப்போல, ஏ.டி.எம் மற்றும் (டிஜிட்டல்) டெபிட் கார்டு வசதிகள் இந்த வங்கிக்கும் இருந்தது. ஆனால் தற்போது இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த வங்கி மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு பாதகமான முறையில் வங்கி நடைமுறைகள் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
எனினும், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும், கியூஆர் கோட் (QR code) ஸ்கேன் சேவைகள், PayTM ஆப் மூலமாக UPI பேமெண்ட்ஸ் மற்றும் மற்ற வங்கி கணக்குகளை இணைத்து பண பரிவர்த்தனை செய்ய இயலும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி கணக்குகள், Wallet அல்லது FASTag சேவைகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், Paytm for Business மூலம் செட்டில்மென்ட் கணக்குகளை மாற்று வங்கிக்கு உடனே மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் Paytm Payments Bank-ல் கணக்கு வைத்திருப்பவர்கள் புதிய டெபாசிட்களை செய்ய முடியாது.
பேடிஎம் பேமேன்ட்ஸ் வங்கியின் செயல்பாடுகள் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிராக இருந்ததாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, வங்கியின் மேலாண்மை மற்றும் நிர்வாக முறை திருப்திகரமாக இல்லை என்றும், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளை இந்த வங்கி தொடர்ந்து மீறி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி எந்த விதமான வங்கி நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குற்ப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்டது அல்ல; கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பேடிஎம் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளைச் சந்தித்து வந்தது. கடந்த 2022 முதல் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டதுடன், கடந்த 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், வாடிக்கையாளர் கணக்குகளில் புதிய டெபாசிட்டுகள், வாலட் டாப்பப்கள் மற்றும் கிரெடிட் பரிவர்த்தனைகளைச் செய்யத் தடை விதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த தடைகள் வங்கியின் வளர்ச்சியை ஏற்கனவே முடக்கியிருந்த நிலையில், தற்போது உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் வங்கியை கலைப்பதற்காக ஐகோட்டில் ஒரு மனுவை சமர்பிக்க இருப்பதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி அப்படி வங்கியை கலைக்கும் போது தனது முழு வைப்பு தொகை பொறுப்பையும் திருப்பி செலுத்துவதற்கு போதுமான பணப்புழக்கத்தை இந்த வங்கி கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.