தலைவர் தவற விட்டதை தளபதி நிறைவேற்றுவாரா?

Cooli - JanaNayagan
Rajini - Vijay
Published on

இந்திய சினிமாவில் பான் இந்தியப் படங்களின் வருகைக்குப் பிறகு ரூ.1,000 கோடி வசூல் சாதனை என்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்கள் எளிதாக ரூ.1,000 கோடி வசூலை எட்டும் நிலையில், இதுவரை ஒரு தமிழ்ப்படம் கூட இந்தச் சாதனையை செய்யவில்லை. தமிழில் ஒவ்வொரு பெரிய படமும் திரைக்கு வரும் போதெல்லாம் நிச்சயமாக இம்முறை ரூ.1,000 கோடி வசூல் கனவு பலித்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தமிழ் ரசிகர்களின் கனவு இன்றுவரை பலிக்கவில்லை‌.

கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் நிச்சயமாக ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், தற்போது வசூல் குறையத் தொடங்கி விட்டது.

முதல் 4 நாட்களில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பல்வேறு சாதனைகளை உடைத்தது கூலி. ஆனால் தற்போது படத்தின் வசூல் குறைந்து விட்டதால் ரூ.1,000 கோடி வசூலை எட்டாது எனத் தெரிந்து விட்டது. இந்நிலையில் மீண்டும் ஒருமுறை தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். தலைவரின் கூலி திரைப்படம் தவறவிட்ட சாதனையை அடுத்து வரப்போகும் தளபதியின் ஜனநாயகன் திரைப்படமாவது நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழில் அடுத்ததாக வரவிருக்கும் பெரிய திரைப்படம் என்றால் அது தளபதி விஜய்யின் ஜனநாயகன் தான். மேலும் விஜய்க்கு இது கடைசி படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று தற்போது அடுத்த கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனநாயகன் திரைக்கு வர உள்ளது. விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் தற்போது தமிழ் ரசிகர்களின் அடுத்த நம்பிக்கையாக மாறியிருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தால் நிச்சயமாக ரூ.1,000 கோடி வசூலை எட்டும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி மற்றும் சூர்யா நடிக்கும் கருப்பு ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
தமிழ்ப் படங்கள் ரூ.1,000 கோடி வசூலைக் கடக்குமா?
Cooli - JanaNayagan

இந்நிலையில் இந்த 2 படங்களையும் கடந்து ரூ.1,000 கோடி வசூலை ஜனநாயகன் திரைப்படம் எட்டுவது கடினம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தால், தமிழ் ரசிகர்களின் ரூ.1,000 கோடி வசூல் கனவு நிச்சயமாக அடுத்த ஆண்டில் நிறைவேறி விடும்.

ஜனநாயகன் ரூ.1,000 கேடி வசூலை ஈட்டி தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்குமா என்பதே தற்போது கோலிவுட் வட்டாரத்தின் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. பொங்கல் பண்டிகையின் போது தொடர் விடுமுறை வருவதால், எதிர்பார்த்த வசூலை ஜனநாயகன் திரைப்படம் எட்டுமா அல்லது ஏமாற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
ரஜினி படத்தை ரீ-மேக் செய்ய ஆசைப்பட்ட தளபதி! எந்தப் படம் தெரியுமா?
Cooli - JanaNayagan

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com