இந்தியாவின் டாப் 5 பணக்கார முதலமைச்சர்கள் யார் யார்...? CM விஜய்க்கு எந்த இடம்?

dk shivakumar vijay chandrababu naidu
dk shivakumar vijay chandrababu naidu
Updated on

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இந்தியாவின் மிகப்பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் இடங்களையும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநில முதலமைச்சர்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தேர்தலில்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பை ஆய்வு செய்து அதன் அடிப்படைடியல் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் என்ற பட்டியலில் டி.கே.சிவகுமார் முதலிடம் பிடித்துள்ளார். எளிமையான உடைகள் மூலம் சிம்பிளான தோற்றத்தை வளர்த்துக் கொள்ளும் பல அரசியல்வாதிகளைப் போலல்லாமல், சிவகுமார் தனது பணபலத்தை வெளிப்படையாகவே தான் அணியும் உடைகள் மூலம் காட்டுவார்.

அவரது ஆடைகள், உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஆடம்பர பிராண்டுகளான Louis Vuitton, Chanel, Prada, Burberry and Gucci ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாகும். அவற்றுடன் ரோலக்ஸ் மற்றும் கார்டியரின் உயர்தர கைக்கடிகாரங்களும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி? பணக்கார மற்றும் ஏழை முதல்-மந்திரி யார்?
dk shivakumar vijay chandrababu naidu

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், 'டிரபிள் ஷூட்டர்' என்று அழைக்கப்படுபவருமான டி.கே.சிவக்குமார், தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் ரூ.1,413 கோடி சொத்துக்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2008-ல் ரூ.75.5 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு, 2013-ல் ரூ.251 கோடியாகவும், 2018-ல் ரூ.840 கோடியாகவும் உயர்ந்து, தற்போது 2023-ல் ரூ.1,413 கோடியைத் தொட்டுள்ளது. இதில் அசையா சொத்து மதிப்பு ரூ.1140 கோடியாகும்.

கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் நாளை மறுநாள் அதாவது வரும் ஜூன் 3-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த பட்டியலில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துக்களுடன் நாட்டின் இரண்டாவது பெரும் பணக்கார முதலமைச்சர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியேற்ற சி. ஜோசப் விஜய் ரூ.648 கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் மூன்றாவது பெரும் பணக்கார முதலமைச்சராகப் பட்டியலிடப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான இவர் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளே ஆகிறது. மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர்.

அருணாசல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு ரூ.332 கோடி சொத்துக்களுடன் 4-வது இடத்திலும், சித்தராமையா (கர்நாடகா) ரூ.51 கோடி சொத்துக்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

இதற்கிடையே மிகவும் வசதி குறைவான முதலமைச்சர்களாக தென்னிந்திய மாநிலமான கேரள முதல்வர் சதீசனின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி என்பதும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொத்து மதிப்பு ரூ27.99 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் பணக்கார எம.எல்.ஏ.வின் சொத்து மதிப்பு ரூ.1,400 கோடி!
dk shivakumar vijay chandrababu naidu

பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.5863 கோடியாகும். மகாராஷ்டிரா எம்எல்ஏ பராக் சிங் ரூ.3383 கோடி சொத்துக்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். இந்த பட்டியலிலும் கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com