

இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்கள். தொலைதூரம் என்றாலும் சரி.. உள்ளூர் போக்குவரத்து என்றாலும் சரி.. ரயில்கள் இருந்தால் அதில் பயணிப்பதே பயணிகளின் முதல் சாய்சாக இருக்கும். ரயில்களை பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்பு வரை டிக்கெட் புக் செய்ய முடியும் வசதி உள்ளது. திடீர் பயண திட்டம் என்றால் தட்கலில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் ரெயிலில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமாகவே உள்ளது. அந்த வகையில் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது நீங்கள் ஏறும் ஸ்டேஷனில் இருந்து டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் 2 அல்லது 3 ஸ்டேஷன் தள்ளி சீட் காலியாக இருக்கும்பட்சத்தில் அந்த ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
குறிப்பாக நாம் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்வதாக இருந்தால் நாம் என்ன செய்வோம், சென்னை- கோயம்புத்தூருக்கு டிக்கெட் போடுவோம். ஆனால் நாம் அதுபோல் தேடும் போது நடுவில் டிக்கெட் ஏதாவது காலியாக உள்ளதா என்பது தெரியாது.
ஆனால் நடுவில் ஏதாவது இடத்தில் சீட் காலியாக உள்ளதாக என்பதால் ஒரு இடத்தில் இருந்து ஈஸியாக பார்த்துக்கொள்ள முடியும். இந்த வசதி இருப்பது பலருக்கும் தெரிவிதில்லை. வாங்க அது எப்படி என்று பார்க்கலாம்...
உங்களுடைய மொபைல் போனில் கூகுளில் போய் chart vacancy என்று டைப் செய்து search செய்தால் reservation chart என்ற ஆப்ஷன் வரும். அதில் போய் நீங்கள் பயணம் செய்ய உள்ள ரெயில் எண், தேதி, எந்த ஸ்டேஷனில் நீங்கள் ஏறப்போறீங்க என்ற தகவல்களை டைப் செய்து get train chart என்பதை கிளிக் செய்தால் அதில் அந்த ரெயிலின் அனைத்து தகவல்களும் உங்களுக்கு வரும்.
அதாவது அந்த ரெயிலில் எத்தனை coach இருக்கு, ஒவ்வொரு coachம் எவ்வளவு டிக்கெட் புக்காகி உள்ளது, எவ்வளவு டிக்கெட் parcial booking இருக்கு, அதுமட்டுமன்றி எந்த ஸ்டேஷனில் இருந்து டிக்கெட் காலியாக உள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு தெரிந்து விடும்.
இப்போ உங்களுக்கு சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் என்ன, அடுத்த 2 அல்லது 4 ஸ்டேஷனில் டிக்கெட் காலியாக இருக்கும் பட்சத்தில் அதை கிளிக் செய்து டிக்கெட் புக்கிங் கொடுத்தால் நேரடியாக irctc வெப்சைட்டிற்கு போய்விடும். அங்கே சென்று உங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம்.
ஆனால் இதில் இரண்டு முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். முதலாவது, புக்கிங் எல்லாம் முடிந்து ரெயில் கிளம்புவதற்கு 6 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரத்திற்குள் தான் இந்த chart உங்களுக்கு தயாராகும். இரண்டாவது ரெயில் கிளம்புவதற்கு முன்னாடியே reservation chartஐ நீங்க சரிபார்த்து டிக்கெட்டை புக் செய்தால் மட்டுமே உங்களால் டிக்கெட் புக் செய்ய முடியும். இதை இரண்டையும் தவறவிட்டால் டிக்கெட் கிடைப்பது கடினம்.