

இந்தக் கட்டுரை மனிதன் உடல், பூமி, விண்வெளி, கடல், கனவுகள் என பல துறைகளில் ஆச்சரியமான தகவல்களை தொகுத்து வழங்குகிறது. இதயத்துடிப்பு, மூளையின் ‘ஸ்லீப் இனர்ஷியா’, மூக்கின் திறன், ஆமையின் ஓடு, சவத்தின் எலும்புக்கூடு உருவாகும் காலம் போன்ற உயிரியல் தகவல்களுடன், மரியானா பள்ளத்தாக்கு, பிங்கி நதி, பால்வீதியில் உள்ள நட்சத்திரங்கள், சனி கிரகத்தின் அடர்த்தி போன்ற இயற்கை மற்றும் விண்வெளி விஞ்ஞான அறிவியல் உண்மைகள் தகவல்களையும் எளிமையாக விளக்குகிறது.
மனிதனின் இதயம் மிகவும் வலுவானது. ஒரு லட்சம் தடவை அது துடிக்கிறது. தினமும் சராசரியாக அது 2500 காலன் (9500 லிட்டர்) இரத்தத்தை பம்ப் (Pump) செய்கிறது.
டைனோசர் இனத்தை முற்றிலுமாக அழித்த குறுங்கோள் மணிக்கு 27000 மைல் (மணிக்கு 43000 கிலோமீட்டர்) வேகத்தில் வந்து பூமியின் மீது மோதியது.
உலகின் மிக ஆழமான இடம் மரியானா ட்ரெஞ்சில் (Mariana Trench) உள்ளது.
பசிபிக் கடலின் மேற்குப் பகுதியில் மரியானா தீவுக்கு 200 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது. 35876 அடி (10935 மீட்டர்) ஆழத்தில் இது உள்ளது. அதாவது மவுண்ட் எவரெஸ்ட் உயரத்தை விட இது 6845 அடி கீழாக உள்ளது.
இங்கிலாந்தையும் பிரான்ஸையும் இணைக்கும் கடலுக்கடியில் உள்ள குகையே உலகில் நீளமான நீருக்கடியில் உள்ள குகையாகும். இது 23.5 மைல் (37.9 கிலோ மீட்டர்) நீளம் கொண்டது.
2026 மார்ச் நிலவரப்படி 970 இயற்கையான சாடலைட்டுகள் சூரிய மண்டலத்தில் உள்ளன.
நமது மூளை தூங்கி எழுந்தவுடன் முழு மூளைத் திறனைக் கொள்ள 15 முதல் 30 நிமிடம் வரை ஆகிறது. இந்த நேரம் ‘ஸ்லீப் இனர்ஷியா’ எனப்படுகிறது.
கொசு இல்லாத உலகின் ஒரே தேசம் ஐஸ்லாந்து தான். ஆனால் இந்தப் பெருமை அந்த தேசத்திற்கு அக்டோபர் 2025 வரைதான் இருந்தது.
1960ம் ஆண்டு முடிய விஞ்ஞானிகள் கனவு என்பது ‘ப்ளாக் அண்ட் ஒய்ட்’ ஆக மட்டுமே இருக்க முடியும் என்று நம்பினர். ஆனால் அது இப்போது இந்த எண்ணம் மாறி விட்டது.
பூமியில் ஏற்படும் பூகம்பத்தின் அதிக பட்ச அளவு 9.5 மாக்னிட்யூடாகத்தான் இருக்கும். இதைவிட பெரிய அளவு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவுதான்!
நமது பூமி இன்னும் 9.5 பில்லியன் (950 கோடி வருடங்கள்) இருக்கும். ஆனால் பல கிரகங்களைச் சுற்றி வரும் குட்டி நட்சத்திரங்கள் பல டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைக் கொண்ட எண், அதாவது ஒரு லட்சம் கோடி) வருடங்கள் வரை இருக்கும்.
நமது அறிவுக்கு எட்டியபடி உலகின் முதல் படகு 10000 ஆண்டுகள் பழமையானதாகும். ஆனால் நீரில் செல்லும் ஒரு சாதனத்தை மனிதன் அறுபதினாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே கண்டுபிடித்துவிட்டான். இதை வைத்துத் தான் ஆஸ்திரேலியாவிற்கு அவன் பயணம் செய்தான்.
நமது மூக்கை நம்மால் பொதுவாகப் பார்க்க முடிவதில்லை. இது ஏன்? ஏனென்றால் நமது மூளை இதை ஒதுக்கிவிடுகிறது. நமது மூக்கு ஒரு டிரில்லியன் வாசனைகளை இனம் கண்டுபிடிக்க வல்லது.
உலகத்தில் உள்ள சுரங்கங்களில் கிடைக்கும் நவரத்தினங்களில் வைரத்தை விட மரகதம் கிடைப்பது மிக அரிதாகும்.
உலகத்தில் உள்ள மிகப் பழமையான நதி ஆஸ்திரேலியாவில் உள்ள பிங்கி நதியாகும். (Finke River). இது சுமார் 3000 முதல் 4000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மனிதனால் பறக்க முடிவதில்லை. ஒருவேளை அவன் பறக்க வேண்டுமென்றால் அவனுக்கு 20 அடி நீள இறக்கைகள் வேண்டும்.
ஒரு ஆமையின் ஓடு 50 எலும்புகளால் ஆனது.
சவப்பெட்டியில் வைக்கப்பட்ட ஒரு சவம் முழு எலும்புக்கூடாக மாற ஆகும் காலம் சுமார் 5 முதல் 10 ஆண்டுகளாகும்.
பால்வீதி மண்டலம் என்னும் மில்கி வேயில் உள்ள நட்சத்திரங்களைவிட நமது பூமியில் அதிக மரங்கள் உள்ளன. இங்கு 3 டிரில்லியன் மரங்கள் உள்ளன என்று அறிவியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். மில்கி வேயில் சுமார் 100 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன.
நமது மூளை 86 பில்லியன் நியூரான்களைக் கொண்டுள்ளது. மின் துடிப்பால் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன. இந்த மின்சக்தியின் மூலம் ஒரு 20 வாட்ஸ் பல்பை எரியவிடலாம்.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கு டெலஸ்கோப் தேவை இல்லை.
இது சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் பூமியை சுற்றி வருகிறது.
சனி கிரகத்தின் சராசரி அடர்த்தி நீரின் அடர்த்தியை விடக் குறைவானது. ஆகவே சனியைவிட பெரிதான ஒரு கடலில் இதைப் போட்டால் இது மிதக்கும்.
இந்தத் தொகுப்பைப் படிப்பதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள உலகம், விண்வெளி மற்றும் நமது உடலின் அரிய இயக்கங்கள் பற்றிய தெளிவான புரிதலையும், பொதுவறிவுத் தேர்வுகளுக்கும் உரையாடல்களுக்கும் பயன்படும் வியத்தகு தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்.