ADHD உள்ள குழந்தைகளுக்கு மாத்திரை வேண்டாம்... இந்த ஒரு பயிற்சி செய்தலே மூளை கம்ப்யூட்டர் மாதிரி வேலை செய்யும்!

adhd-brain-training
adhd-brain-training
Published on

இன்றைய காலகட்டத்தில் நிறைய குழந்தைகளுக்கு கவனக்குறைவு மற்றும் அதீத சுட்டித்தனம் இருக்கிறது. மருத்துவ உலகில் இதை ஏடிஎச்டி (ADHD) என்று சொல்வார்கள். இந்த பிரச்சனை இருக்கும் குழந்தைகள் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார மாட்டார்கள், சொல்வதைக் கேட்க மாட்டார்கள். இதற்கு பெரும்பாலும் மாத்திரைகள் தான் கொடுக்கப்படுகின்றன. 

ஆனால், மாத்திரைகள் இல்லாமல், விளையாட்டுகள் மூலம் இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியுமா என பல பெற்றோர்கள் ஏங்குவதுண்டு. அதற்கான ஒரு சூப்பரான பதிலை தான் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளார்கள். 

வெறும் உடற்பயிற்சி மட்டும் போதாது!

பொதுவாக குழந்தைகள் துருதுருவென இருந்தால் அவர்களை ஓட விடுவது, சைக்கிள் ஓட்ட வைப்பது போன்ற உடற்பயிற்சிகளை செய்யச் சொல்வார்கள். இதனால், அவர்களின் அதீத ஆற்றல் குறைந்து கொஞ்சம் அமைதியாவார்கள். ஆனால், சமீபத்தில் ஆறு முதல் பத்து வயதுடைய சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை வைத்து ஒரு பெரிய ஆராய்ச்சி நடத்தினார்கள். அதில் ஒரு குரூப் குழந்தைகளுக்கு சாதாரண ஓட்டப்பயிற்சியும், இன்னொரு குரூப் குழந்தைகளுக்கு மூளைக்கும் உடம்புக்கும் சேர்த்து வேலை கொடுக்கும் புதிய வகை பயிற்சிகளும் வழங்கப்பட்டன. 

அதாவது ஓடிக்கொண்டே இருக்கும்போது திடீரென நிற்க சொல்வது, கட்டளைகளை மாற்றி மாற்றி கொடுப்பது என மூளையை குழப்பும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. பன்னிரண்டு வாரங்கள் தொடர்ந்து நடந்த இந்த டெஸ்ட்டில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

புதிய பயிற்சி!

சாதாரணமாக ஓடிய குழந்தைகளை விட, மூளைக்கும் உடம்புக்கும் சேர்த்து பயிற்சி செய்த குழந்தைகளுக்கு சூப்பரான ரிசல்ட் கிடைத்தது. மூளையை கசக்கி உடலையும் இயக்கும் போது, குழந்தைகளின் சுயக்கட்டுப்பாடு அதிகமாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல், எதையும் உடனே ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறனும் பல மடங்கு அதிகரித்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். 

இது ஏதோ சாதாரண பயிற்சி கிடையாது. உடம்பு அசையும் அதே நேரத்தில் மூளையும் விழிப்புடன் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், அவர்களின் கவனம் சிதறுவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படுகிறது. இது அவர்களின் நினைவாற்றலை கூர்மையாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
ரசாயனம் இல்லாத பராமரிப்பு: இளநரையைப் போக்க உதவும் மூலிகைகள்!
adhd-brain-training

பக்கவிளைவுகள் இல்லாத தீர்வு!

இந்த ஏடிஎச்டி பிரச்சனைக்கு தொடர்ந்து மாத்திரைகள் கொடுக்கும்போது சில நேரங்களில் தேவையற்ற பக்கவிளைவுகள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த புதிய மூளை-உடல் பயிற்சி முறையில் எந்த ஒரு கெடுதலும் இல்லை என்பது தான் இதில் உள்ள மிகப் பெரிய ஹைலைட். 

இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு போல இருப்பதால் குழந்தைகளும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் சந்தோஷமாக இதை செய்கிறார்கள். தங்களின் குழந்தைகள் விளையாடிக்கொண்டே தங்களை அறியாமலேயே குணமடைவதை பார்த்து பெற்றோர்களும் திருப்தி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
MGRக்கும் சென்சார் போர்டால் பிரச்சனை வந்துள்ளது தெரியுமா?
adhd-brain-training

ஏடிஎச்டி பிரச்சனை இருக்கும் குழந்தைகளை வெறும் ட்ரெட்மில்லில் ஓட வைப்பதில் எந்த ஒரு பெரிய பிரயோஜனமும் இல்லை. அவர்களுக்கு உடலும் மூளையும் இணைந்து செயல்படும் வகையிலான சுவாரஸ்யமான விளையாட்டுகளை சொல்லிக் கொடுப்பது தான் மிகச் சிறந்த தீர்வு. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளில் இந்த சிம்பிளான டெக்னிக்கை பயன்படுத்தினால், எந்த ஒரு மருந்தும் இல்லாமல் குழந்தைகளின் கவனக்குறைவை ஈஸியாக சரிசெய்துவிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com